நிரந்தர அதிமுக பொது செயலாளராக எடப்பாடி தேர்வு! எம்ஜிஆர் யின் அன்றைய நோக்கமே அதுதான்!

Photo of author

By Rupa

நிரந்தர அதிமுக பொது செயலாளராக எடப்பாடி தேர்வு! எம்ஜிஆர் யின் அன்றைய நோக்கமே அதுதான்!

Rupa

Edappadi selected as Permanent AIADMK General Secretary! That was MGR's intention for the day!

நிரந்தர அதிமுக பொது செயலாளராக எடப்பாடி தேர்வு! எம்ஜிஆர் யின் அன்றைய நோக்கமே அதுதான்!

அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அதில் பேசிய அவர், திமுக ஒன்றை ஆண்டுகள் ஆட்சி அமைத்து மக்களுக்காக எந்தவித நன்மையையும் செய்யவில்லை. ஆட்சி அமைத்தது முதல் தற்பொழுது வரை விலைவாசியை தான் உயர்த்தியுள்ளது. பால் விலையை குறைத்து அதன் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களின் விலையை அதிகரித்துள்ளது.

அதேபோல தற்பொழுது மின் கட்டணத்தையும் உயர்த்தியுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கொலை, கொள்ளை, சம்பவங்கள் அதிகரித்துள்ளது. பள்ளி மாணவர் மற்றும் மாணவிகளுக்கு சுலபமாக மது, கஞ்சா கிடைக்கும் நிலைக்கு இவ்வரசு  தள்ளிவிட்டது உள்ளது. 24 மணி நேரமும் மது பொருட்களின் விற்பனை நடந்து தான் வருகிறது. கற்றுக் கொள்ளாத மாணவர்கள் கூட கற்றுக் கொள்ளும் நிலைமை வந்துவிட்டது. புதிய வகை காய்ச்சல் பரவி வரும் நிலையில் மாத்திரை தட்டுப்பாடு நிலவியுள்ளது. இதற்காகத்தான் திமுக வை ஆரம்ப கட்ட காலத்திலேயே அழிக்க வேண்டும் என்ற நோக்கில் எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கினார். அவ்வாறு தொடங்கப்பட்ட கட்சியை பன்னீர்செல்வம் இடையில் கலைத்து கட்சிக்கு புறம்பான செயல்பாடுகளை செய்ய முயன்றார். இதனால்தான் ஒற்றை தலைமை பூதாகரமாக வெடித்தது. கூடிய விரைவில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்படும். அதில் எடப்பாடி பழனிசாமி தான் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவார் என்றும் கூறினார்.