சசிகலாவை அறவே ஒதுக்கும் எடப்பாடி! வெட்டவெளுச்சமான அம்பலம்!

Photo of author

By Rupa

சசிகலாவை அறவே ஒதுக்கும் எடப்பாடி! வெட்டவெளுச்சமான அம்பலம்!

வரும் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடக்கயிருக்கிறது.இந்நிலையில் மக்கள் பல குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.முதலில் சொத்துகுவிப்பு வழக்கில் சிறையிலிருந்து விடுதலையாகி வந்த சசிகலா விரைவாக மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்வேன் எனவெல்லாம் கூறினார்.மக்களின் எதிர்பார்ப்பை முற்றிலுமாக ஏமாற்றிவிட்டு நான் கட்சியிலிருந்து விலகிக்கொல்கிறேன் என்ற திடீர் அறிவிப்பை வெளியிட்டார்.இதைக்கேட்ட அவர்களது தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

அமமுக கட்சியினருக்கு அவ்வாறு இருந்தாலும் மற்ற கட்சிகள் சந்தோஷத்தில் பெரும் மூச்சு விட்டனர்.இதன் பின்னணியாக அதிமுக வினர் இருக்கலாம் என பலரால் பேசப்பட்டு வருகிறது.இதனைத்தொடர்ந்து விருப்பமனு வேட்பாளர் பட்டியலை அதிமுக வினர் அறிவித்தனர்.அதில் அதிமுக வினர் 177 வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவித்துள்ளது.அதில் தற்போது அமைச்சர்களாக இருக்கும் 33 பேருக்கு மீண்டும் வாய்ப்பினை அதிமுக அரசு கொடுத்துள்ளது.மீதமுள்ள  66 எம்.எல்.ஏ க்களுக்கு வாய்ப்பினை தரவில்லை.

அதற்கு பின்னோக்கிலிருந்து பல காரணங்களை கூறிவருகின்றனர்.இதனையெல்லாம் விளக்கும் விதமாக தான் அதிமுக தரப்பிடம் கேள்விகள் கேட்கப்பட்டது.அதில் அவர்கள் கூறியது,இந்த வேட்பாளர் பட்டியலானது ஓர் இரவில் எடுக்கப்பட்டது அல்ல.பல நாட்களாக கலந்துரையாடி எடுக்கப்பட்டது.இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,துணை முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் முக்கிய அமைச்சர்கள் என அனைவரும் கலந்துரையடி தான் முடிவுகள் எடுக்கப்பட்டது.இதில் முதலாக மக்களுக்கு விருப்பமான வேட்பாளர்கள் தேர்ந்தேடுக்கபட்டனர்.

அதன்பின் ஏற்கனவே இருக்கும் எம்.எல்.ஏ க்கள் சிலர் தேர்வு செய்யப்பட்டனர்.அதனைத்தொடர்ந்து சசிகலா கட்சிக்கு ஆதரவு செய்தவர்களை வேட்பாளராக தேர்வு செய்வதை முற்றிலுமாக தவிர்த்தனர்.இதனை பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இதில் ஒருமித்த கருத்துடன் செயல்பட்டனர்அதன்பின் சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு அவரை சந்தித்த வேட்பாளர்களையும் தேர்வு செய்யக் கூடாது என்பதில் தீர்க்கமாக இருந்தனர்.அதுமட்டுமின்றி இரு கட்சிக்கும் பொதுப்படையாக இருப்பவரையும் அவர்கள் தேர்வு செய்யவில்லை.

அதிமுக கட்சிக்கு நம்பகமாக இருப்பவர்களை மட்டும் தேர்வு செய்வதில் குறிக்கோளாக இருந்தனர்.அதுமட்டுமின்றி நம் கட்சியிலிருந்து மீண்டும் சசிகலா கட்சிக்கு தாவதிருக்கும் வேட்பாளர்களையே குறிப்பிட்டு தேர்வு செய்தனர்.இவ்வாறு அந்த 66 எம்.எல்.ஏ க்களும் பல காரணங்களால் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.இவற்றிலிருந்தே தெரிகிறது சசிகலாவின் ஒரு துரும்பைக்கூட எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லை.சசிகலாவை அறவே ஒதுக்குகின்றனர் என்பதை இந்த வேட்பாளர் பட்டியல் தேர்ந்தெடுப்பு மூலமே அதிமுக வினர் வெட்ட வெளுச்சம் போட்டுக் காட்டிவிட்டனர்.