எடப்பாடியின் சீக்ரெட் டீம்.. இடைத்தேர்தலில் மண்ணை கவ்வும் திமுக!! கதிகலங்கும் ஸ்டாலின்!!
ஈரோடு மாவட்டத்தில் இடைத்தேர்தல் நடைபெற போவதால் அனைத்து கட்சிகளும் அவர்களது வேட்பாளர்களை அறிவித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் அதிமுகவும் ஓபிஎஸ், இபிஎஸ் என்ற இரு அணிகளாக இருக்கும் பட்சத்தில் இரு வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
மேலும் இரட்டை இலை சின்னம் ஓபிஎஸ் அணிக்கா அல்லது இபிஎஸ் அணிக்கா என்ற எந்த ஒரு முடிவும் கிடைக்காமல் உள்ள நிலையில் தற்பொழுது எடப்பாடி புதிய நான்கு சீக்ரெட் டீம்களை தேர்தல் களத்தில் இறக்கி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
அந்த வகையில் இது குறித்து ஈரோடு மாவட்டத்தில் கடந்த 30 ஆம் தேதி அன்று இரவு எடப்பாடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. முதலில் இந்த கூட்டத்தில் அனைவரும் இருந்த நிலையில், இறுதியில் முக்கிய நிர்வாகிகள் உடன் மட்டும் இரவு 12 மணி வரை இந்த ஆலோசனையை மேற்கொண்டார்.
அதில் இந்த முறை தேர்தலில் திமுகவை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும், அது மட்டும் இன்றி திமுகவின் ஒவ்வொரு மூவையும் நாம் கவனித்து வர வேண்டும் என்றவாறு ஆலோசனை செய்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
அந்த வகையில் நான்கு குழுக்களை பிரித்து முதல் குழுவானது திமுக எந்த வகையான செயல்பாடுகளை இந்த தேர்தலுக்காக செய்கிறது என்பதை கவனிக்க ஒரு குழு என்றும், இரண்டாவது குழுவானது எந்தெந்த வாக்கு வங்கிகள் திமுகவுக்கு ஆதரவாக உள்ளது, அதனை எவ்வாறு நமது பக்கம் கொண்டு வருவது என்பது குறித்தும், மூன்றாவது குழுவானது முன்பதாகவே கே என் நேரு பண பட்டுவாடா பற்றி பேசி உள்ளார்.
அவ்வாறு பணம் பட்டுவாடா நடைபெறுகிறதா என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக இந்த மூன்றாவது குழு என்று கூறுகின்றனர். அடுத்த நான்காவது குழுவானது மக்களின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதை அறிந்து அதற்கு ஏற்றவாறு வாக்குகளை சேகரிக்க திட்டமிடுதல் எனக் கூறியுள்ளாராம்.
எந்த ஒரு பொய்யான தகவல்களையும் இந்த குழுக்கள் சேகரிக்காமல், உண்மையாக உள்ள தகவல்களை மட்டும் சேகரிக்குமாறு அறிவுறுத்தியுள்ளாராம். இதில் ஏதேனும் சிறு தவறு நடந்தால் கூட அது நமது பக்கம் திரும்பும் அது நமக்கு பாதகமாக மாறிவிடும் என்றும் எச்சரித்துள்ளதாக கூறுகின்றனர்.இந்த 4 டீம்களை வைத்து திமுக-வின் செயல்பாடுகளை கண்டுபிடித்து அதற்கேற்றவாறு காய் நகர்த்த உள்ளதாக கூறுகின்றனர்.