அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்! அதிர்ச்சியில் திமுக!

Photo of author

By Sakthi

தமிழக ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றும் ஊராட்சி செயலாளர்கள், மற்றும் துப்புரவு பணியாளர்கள்,என்று சுமார் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 524 பணியாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி ஆணையிட்டிருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்,ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்களுக்கும் ஊரக வளர்ச்சித்துறை சங்கங்களின் கூட்டமைப்பு நன்றிகளை தெரிவித்து இருக்கிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஊரக வளர்ச்சித்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக பத்திரிக்கையாளர்களை சந்தித்து இருக்கிறார்கள்.

அந்த சமயத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றும் 12524 ஊராட்சி செயலாளர்களும், ஊராட்சித் துறையில் பணிபுரிந்து வந்த மோட்டார் பம்புகள் இயக்கம் சுமார் 60 ஆயிரம் ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியம் 2600 ஆயிரம் ரூபாயில் இருந்து 4 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி தெரிவித்தார் 66 ஆயிரம் தூய்மை பணியாளர்கள், மற்றும் காவலர்கள், கோரிக்கையை ஏற்று ஆயிரம் ரூபாய் ஊதிய உயர்வு என்று ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 524 பணியாளர்களின் குடும்பத்திற்கு உதவி புரிந்திருக்கிற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ். பி. வேலுமணி அவர்களுக்கும் ஊரக வளர்ச்சித்துறை அனைத்துச் சங்கங்களின் சார்பாக நன்றியை தெரிவித்து இருக்கிறார்கள்.

நேற்றைய தினம் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரில் தமிழக விவசாயிகள் தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய விவசாய கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்வதாக அறிவித்தார் எடப்பாடி பழனிச்சாமி. விவசாய மக்களுக்கு இடையில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு அவர்கள் மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார்கள். இதற்கு முன்பு தாங்கள் வெற்றி பெற்றால் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார். ஆனால் திமுகவின் இந்த அறிவிப்பிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் முதல்வர் அந்த விவசாய கடன்கள் அனைத்தையும் இப்போதே உடனடியாக தள்ளுபடி செய்துவிட்டார். இதன் காரணமாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மிகுந்த அதிர்ச்சியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவர் அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு வருவதற்குள் ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றும் ஊராட்சி செயலாளர்கள், துப்புரவு பணியாளர்கள், என்று சுமார் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 524 நபர்களும் ஊதிய உயர்வை கண்டித்து ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.

முதல்வர் விவசாய கடன்களை தள்ளுபடி செய்தது எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. ஆனால் அதற்குள் இப்படி ஒரு அறிவிப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டதன் மூலம் அந்தக் கட்சிக்கே மிகப்பெரிய அடி விழுந்து இருப்பதாகச் சொல்கிறார்கள். முதல்வரின் இந்த அறிவிப்பு மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. மக்களுடைய நம்பிக்கைக்கு உரிய முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி மீண்டும் மீண்டும் தன்னை நிரூபித்துக் கொண்டே இருப்பது அதிமுகவின் செல்வாக்கை மக்களிடையே சரசரவென அதிகரிக்க செய்கிறது. எடப்பாடி பழனிச்சாமி மக்கள் நலத்திட்டங்களையும் அதிவேக பணிகளையும் கண்ட திமுக மிரண்டு போய் தான் இருப்பதாக சொல்கிறார்கள்.