சொன்ன சொல்லை நிறைவேற்றாத எடப்பாடியார்! நிறைவேற்ற மறந்து விட்டாரா என கேட்கும் திமுக!
தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கிய நிலையில் பரபரப்பாக தேர்தல் பிரச்சாரம் நடந்து வருகிறது.இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமயம் அருகே உனையூர் கிராமத்தில் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற மக்கள் குறைக்கேட்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில் ஸ்டாலின் பல கேள்விகளை அதிமுகவிற்கு எதிராகவே கேட்டார்.அதில் ஒன்றான,அவர் செய்வேன் என்று கூறிய பல திட்டங்கள் பலவற்றை நிறைவேற்றவில்லை என சொல்லிக்காட்டி பேசினார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் அதிமுக அறிவித்த அனைத்தையும் எடப்பாடியார் நிறைவேற்றினார?
முதலில் இரண்டாவது புரட்சி வரும் என்றார்,விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்துவேன் என்று கூறினார்.இவை எதையும் நிறைவேற்றவில்லை.விவசாயிகளுக்கு விவசாயக் கருவிகளை இலவசமாக வழங்குவேன் எனக் கூறினார்.இதனையடுத்து கரும்பை போல மற்ற பயிர்களுக்கும் குறைந்த பட்ச ஆதாரவிலை வழங்கப்படும் எனக்கூறினார்.இவற்றில் எதையுமே அவர் நிறைவேற்றவில்லை.மக்களுக்காக செய்வேன் என்று சொல்லி ஏமாற்றிவிட்டார்.
அதே போல் அடுத்த 2016 ஆம் ஆண்டு தேர்தலின் போது கூறிய அறிக்கைகளை நிறைவேற்றினார?
குடும்ப அட்டை வைத்திருப்போருக்கு இலவச செல்லிடப்பேசி வழங்கப்படும் என கூறினார்.கல்வி கடனை ரத்து செய்வேன் என்றும் கூறினார்.அதன் பிறகு அம்மா பேங்கிங் கார்டு வழங்கப்படும் எனக் கூறினார்.ஒரு லிட்டர் பால் ரூபாய் 25 க்கு வழங்கப்படும் எனக்கூறினார். இவற்றில் எதையுமே நிறைவேற்றாத அதிமுக ஆட்சி மக்களுக்காக செய்வதாக சொல்லி மக்களை ஏமாற்றுகின்றனர்.
இதே திமுக ஆட்சிக்கு வந்தால் புதிய தொழில்கள் உருவாக்கப்படும் அதன்பிறகு வேலைவாய்புகள் உருவாக்கப்பட்டு படித்தவர்களுக்கு வேலையில்லா திண்டாட்டத்தை முறியடிப்பேன் என்று கூறினார்.இதனையடுத்து ஸ்டாலின் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சாதனையாளர்களை மேடையில் அழைத்து பாராட்டினார்.
முன்னதாக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ரகுமதி எம்எல்ஏவை வரவேற்றார்.வடக்கு மாவட்ட கே.கே.செல்பாண்டியன்,சட்டபேரவை உறுப்பினர்கள் புதுக்கோட்டை பெரியண்ணன்,ஆலங்குடி சிவா.வீ.மெய்யநாதன்,முன்னால் எம்எல்ஏக்கள் கவிதைப்பித்தன்,உதயம் சண்முகம்,சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் த.சந்திரசேகரன்,தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜெயராமன்,புதுக்கோட்டை நகர திமுக செயலாளர் க.நைனாமுகமது உள்ளிட்ட திமுகவினர் கலந்துக்கொண்டனர்.பொதுமக்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.