முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை 2021 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலுக்கான, பிரச்சாரத்தை இன்று தொடங்கி இருக்கிறார்.அவர் தன்னுடைய சொந்த ஊரான எடப்பாடியில் இருந்து பிரச்சாரத்தை ஆரம்பித்தார்.
அதிமுக பிரச்சார களத்தில் இறங்கி விட்டது, என்பது ஒரு பரபரப்பு என்று சொன்னால், பொங்கல் பரிசாக குடும்ப அட்டையை ஒவ்வொன்றுக்கும், 2500 ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருப்பது, கூடுதலான பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது ஆயிரம் ரூபாய் வழங்கியது பெரிது என மக்கள் நினைத்திருந்த வேளையில், 2500 ரூபாய் என்று அறிவிப்பை வெளியிட்ட அறிவிப்பால் வாய்ப்பிளந்து நிற்கிறார்கள் பொதுமக்கள்.
பிரச்சாரத்தின் போது தன்னுடைய சொந்த ஊரான எடப்பாடி தொகுதியில் உரையாற்றிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, 43 வருடகால வரலாற்றில் ஒரு முறை கூட எடப்பாடி தொகுதியில் திமுக வெற்றி பெற்றது கிடையாது. எடப்பாடி அதிமுகவின் கோட்டை அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்தாலும் அதிமுகவை வீழ்த்த இயலாது. முதலமைச்சர் தொகுதி என்ற ஒரு பெருமை எடப்பாடி தொகுதிக்கு இருக்கின்றது என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், #எடப்பாடியார் #AIADMKFOR2021 ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகிறது. இம்மூன்று ஹேஷ்டேக்குகளும் மாநில அளவில் ட்ரெண்டிங் ஆகி இருக்கின்றது.