டெண்டர் முறைகேடு புகாரில் சிக்கும் எடப்பாடியார் ஆட்சி!

0
171
Case against EPS, information in Police High Court
Case against EPS, information in Police High Court
டெண்டர் முறைகேடு புகாரில் சிக்கும் எடப்பாடியார் ஆட்சி!
2016 முதல் 2021 ஆட்சி காலத்தின் செயல்திறன் குறித்து CAG வெளியிட்டுள்ள அறிக்கையில் வெளிவந்துள்ள தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளன.
கடந்த 2016ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை அதிமுக கட்சி தமிழகத்தில் ஆட்சி புரிந்தது. அப்போது தமிழகத்தில் செல்வி ஜெ.ஜெயலலிதா, ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி ஆகிய மூவரும் முதல்வர் பொறுப்பு வகித்தனர். அத்தகைய காலகட்டத்தில் பல்வேறு குற்றஞ்சாட்டுகளும், ஊழல் புகார்களும் எழுந்தன.
இந்நிலையில், 2016 முதல் 2021 ஆட்சி காலத்தின் செயல்திறன் குறித்து CAG அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
ஆட்சியில், தமிழ்நாடு அரசு உயர்நிலை பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை விகிதம் 14.76% சதவீதமும், மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 11.84% சதவீதமும் குறைந்துள்ளதாகவும்,
2016-21 ஆண்டு தரம் உயர்த்தப்பட்ட 528 பள்ளிகளில் 515 பள்ளிகள் பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளை பூர்த்தி செய்யவில்லை மற்றும் போதிய உள்கட்டமைப்பு மற்றும் ஆசிரியர்களை பணி நியமனம் செய்யவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2016-21 மாநில அரசாங்கத்தின் பட்ஜெட்டில் பள்ளிக்கல்விக்கு போதிய முன்னுரிமை வழங்கவில்லை என்பதால்,  2016-17ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) 0.94% சதவீதத்தில் இருந்து 2020-21ல் 0.85% சதவீதமாக குறைந்துள்ளது என்று கூறபட்டுள்ளது.
மேற்கூறிய நிர்வாகத் திறன் குறைவால் தமிழ்நாட்டில் 11,711 வகுப்பறைகள் பற்றாக்குறையாக உள்ளது. தற்போது நடைபெற்று வரும் பணிகளின் வேகத்திலும் அடுத்த 10 ஆண்டுகளில் கூட இந்த இடைவெளியை குறைக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் விதிகளின்படி டெண்டர்களை கையாளும் பணிக்கு இளநிலை அளவில் உள்ள அதிகாரிகளை நியமனம் செய்யக்கூடாது என்ற விதியை மீறி டைப்பிஸ்ட்டுகள், இளநிலை பொறியாளர்களை கொண்டு டெண்டர்கள் விடப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.
இத குறித்து உரிய விசாரணை நடத்தி, உண்மை நிலை தெரிய வரும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
Previous articleஎதிர்கட்சி துணை தலைவர் பதவி! சபாநாயகர் பாரபட்சம்!
Next articleகட்சியின் சின்னமான இரட்டை இலையையும் பயன்படுத்தக்கூடாது – எடப்பாடி தரப்பினர்!!