பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதில் ஏற்பட்ட சிக்கல்!

Photo of author

By Sakthi

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் அதிகமாக இருந்த காரணத்தால், ஒன்பதாம் வகுப்பு முதல் பதினோராம் வகுப்பு வரையிலான தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து பல ஆலோசனைக்குப் பின்னர் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. மாணவர்களுக்கான மதிப்பெண் வழங்கும் முறையை முடிவு செய்ய தனியாக குழுவொன்று அமைக்கப்பட்டது. அந்த குழு மதிப்பெண் வழங்கும் முறையை இன்னும் அறிவிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

அதிலும் குறிப்பாக பத்தாம் வகுப்பு மாணவர்கள் பதினோராம் வகுப்பில் சேருவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. எந்த நிலையிலும் மதிப்பெண் வழங்கும் முறை தொடர்பாக இதுவரையில் எந்தவிதமான முடிவும் எடுக்கப்படாமல் இருந்து வருகிறது.. மாணவர்கள் இதன் காரணமாக, அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். சென்ற வருடம் காலாண்டு ,அரையாண்டு தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டது இந்த வருடம் எந்தவிதமான தேர்வும் நடத்தப்படாத காரணத்தால், மதிப்பெண் வழங்குவதில் இன்று வரையில் சிக்கல் நீடித்து வருகின்றது.

ஒன்பதாம் வகுப்பு தேர்வு அடிப்படையில் மதிப்பெண்ணை கணக்கிடலாம் ஆனாலும் கூட தனியார் பள்ளிகளில் அதற்கான கோப்புகள் இல்லாத காரணத்தால், அதிலும் சிக்கல் நீடித்து வருகின்றது. இந்த சூழ்நிலையில், பத்தாம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ் மதிப்பெண்களை குறிப்பிடாமல் பெயர்ச்சி என்று மட்டும் குறிப்பிட்டு சான்றிதழ் வழங்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்து இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. என அறிவிக்கப்பட்ட தன் காரணமாக பாடவாரியாக தேர்ச்சி என்று மட்டும் குறிப்பிட்டு வழங்கப்பட இருப்பதாக தெரியவந்திருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.