கல்வி தகுதி: டிகிரி.. BPCL நிறுவனத்தில் சூப்பர் வேலை!! மொத்தம் 125 காலிப்பணியிடங்கள்!
மத்திய அரசால் இயக்கப்பட்டு வரும் பாரத் பெட்ரோலியம் கார்பரேசன் லிமிடட் (BPCL – Bharat Petroleum Corporation Limited) எண்ணெய் மற்றும் வளிமம் நிறுவனம் ஆகும்.பாரத் பெட்ரோலியம் சுத்திகரிப்பு நிலையங்கள் கொச்சி மற்றும் மும்பை இயக்குகி வருகிறது. இந்நிறுவனத்தில் காலியாக உள்ள Graduate Apprentice பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்பொழுது வெளியாகி இருக்கின்றது.
வேலை வகை: மத்திய அரசு பணி
நிறுவனம்: பாரத் பெட்ரோலியம் கார்பரேசன் லிமிடட் (BPCL – Bharat Petroleum Corporation Limited)
பதவி: Graduate Apprentice
பணியிடம்: கொச்சி
காலியிடங்கள்: Graduate Apprentice பணிக்கென மொத்தம் 125 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி: Graduate Apprentice பணிக்கு விண்ணப்பம் செய்ய விருப்பம் இருக்கும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் பொறியியல்(Engineering) படிப்புகளில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது 18 முதல் 27க்குள் இருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசின் விதிகளின்படி வயது வரம்பில் சில தளர்வுகள் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மாத சம்பளம்: Apprentice பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ. 25,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை : நேர்காணல்(Interview)
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி
Apprentice பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்கள் (http://bharatpetroleum.com/) என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு முறையான ஆவணங்களுடன் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகவரி:
BPCL SAP Training Centre, ‘A’ Installation,Sewree (East) Sewree Fort Road,Near Sewree Station,Mumbai – 400015.
கடைசி தேதி: இப்பணிக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பம் செய்ய 15-09-2023 கடைசி நாள் ஆகும்.