கல்வி தகுதி: டிப்ளமோ.. BSNL நிறுவனத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு!! விண்ணப்பம் செய்ய செப்டம்பர் 15 இறுதி நாள்!!

0
44
#image_title

கல்வி தகுதி: டிப்ளமோ.. BSNL நிறுவனத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு!! விண்ணப்பம் செய்ய செப்டம்பர் 15 இறுதி நாள்!!

பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட்டில் (Bharat Sanchar Nigam Limited – BSNL) நிறுவனத்தில் காலியாக உள்ள
பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.அதன்படி Apprentice (அப்ரண்டிஸ்) பணிகளுக்கு தகுதி இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வருகின்ற செப்டம்பர் 15 வரை ஆன்லைன்(மின்னஞ்சல் வழியாக) வரவேற்கப்பட இருக்கின்றன.

வேலை வகை: மத்திய அரசு பணி

நிறுவனம்: பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட்டில் (Bharat Sanchar Nigam Limited – BSNL)

பணியிடம்: ஹரியானா

பதவி: Apprentice (அப்ரண்டிஸ்)

காலியிடங்கள்: இப்பணிகளுக்கு மொத்தம் 40 காலியிடங்கள் ஒதுக்கப்ட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி: BSNL – Apprentice (அப்ரண்டிஸ்) பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் பொறியியல் படிப்பில் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் (Bachelor Degree) பெற்றிருக்க வேண்டும்.இல்லாவிட்டால் டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: Apprentice (அப்ரண்டிஸ்) பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 25 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.மத்திய அரசின் விதிகளின் படி வயது வரம்பில் சில தளர்வுகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாத சம்பளம்:

Graduate Apprentice பதவிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம்ரூ.9,000/- ஊதியம் வழங்கப்படும்.

Diploma Apprentice பதவிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம்ரூ.8,000/- ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

1.Based on Merit

2.நேர்காணல் (interview)

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி (மின்னஞ்சல்)

Apprentice (அப்ரண்டிஸ்) பதவிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்கள் https://www.bsnl.co.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.பின்னர் அதனை பூர்த்தியிட்டு ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு ஆன்லைன் வழியாக அனுப்பி வைக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைசி தேதி: இப்பதவிக்கு விண்ணப்பம் செய்ய வருகின்ற செப்டம்பர் 15 கடைசி நாள் ஆகும்.