வேகமாக பரவி வரும் புதிய வகை நோய் தொற்று! உஷாரான தமிழக சுகாதாரத்துறை!

0
209

இந்தியாவில் ஊடுருவி வரும் புதிய வகையில் ஒமைக்ரான் நோய்தொற்று பரவலை தடுப்பதற்கு சீனா, தென் ஆப்பிரிக்கா, இஸ்ரேல், சிங்கப்பூர், உள்ளிட்ட நாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வரும் விமான பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த சோதனை முடிவுகள் வரும்வரை பயணிகளை விமான நிலையத்திலேயே காத்திருக்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத் துறை அறிவுறுத்தி இருக்கிறது. இதனை கருத்தில் வைத்து விமான பயணிகளுக்கான பரிசோதனை முடிவுகளை ஐந்து முதல் ஆறு மணி நேரத்திற்குள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த சூழ்நிலையில், பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை முன்னிட்டு விமான நிலையத்தில் நோய்த்தொற்று பரிசோதனைக்கான கட்டணம் குறைக்கப்பட்டிருக்கிறது.

அதனடிப்படையில், சென்னை விமான நிலையத்தில் துரித பரிசோதனைக்கு 3400 ரூபாயும், ஆர்டிபிசியல் பரிசோதனைக்கு 700 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்சமயம் துரித பரிசோதனை கட்டணம் 2,900 ரூபாயாகவும், ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டணம் 600 ரூபாயாகவும், நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

இந்த புதிய வகை வைரஸ் பரவலை தடுக்கும் விதத்தில் 11 நாடுகளில் இருந்து வருபவர்கள் எல்லோருக்கும் நோய் தொற்று பரிசோதனை செய்யப்படுகிறது. சென்னைக்கு வரும் விமானங்களில் ஒரு நாளைக்கு சராசரியாக 750 பயணிகளுக்கு நோய் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Previous article8-12-2021 இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!
Next articleஅதிமுக புறம்போக்கு நிலமல்ல! சசிகலாவிற்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்த அதிமுக நிர்வாகி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here