Tamilnadu: தமிழகம் பல்வேறு ஆண்டுகளாக கல்வியை மாநில அரசிடம் முழுமையாக ஒப்படைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறது. இதில் ஆளும் கட்சி என தொடங்கி எதிர்க்கட்சி வரை தற்போது வந்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் உள்ளிட்ட பலரும் இது ரீதியான எதிர்ப்பை கொடுத்து வருகின்றனர். ஆனால் வளர்ந்த நாடான அமெரிக்காவில் தற்போது இதனை அமலுக்கு டிரம்ப் கொண்டு வந்துள்ளார். அதாவது மத்திய கல்வி என்பதை தவிர்த்து விட்டு மாகாண அரசுகளிடம் கல்வி ஒப்படைக்கும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது ஒவ்வொரு முறை அரசு மாறும்போதும் அது சார்ந்து கல்வியிலும் மாற்றத்தை கொண்டு வந்து விடுகின்றனர். இதனால் மாணவர் மற்றும் மாணவிகள் கல்வி ரீதியாக பல இன்னல்களைசந்திக்க வேண்டி உள்ளது. இதனை மாற்றும் பொருட்டு தற்பொழுது அமெரிக்காவில் இந்த நடைமுறையை ட்ரம்ப் கொண்டு வர உள்ளார். தமிழகத்தில் தொடங்கிய இந்த கோரிக்கை தற்பொழுது அமெரிக்காவில் வரை நடைமுறைக்கு வருவதை பார்க்கையில் சரியான கூற்று என்று பலரும் கூறினாலும், தற்போது இந்தியாவில் இது ஏன் நடைமுறைப்படுத்த முடியவில்லை என்று கேள்வி எழுந்துள்ளது.
அதுமட்டுமின்றி மாநில அரசுக்கு கல்வி முழுமையாக மாறும் பொழுது நீட் போன்ற தேர்வுகள் இருக்காது. இதையெல்லாம் வைத்து தான் மாநில அரசிடம் கல்வியை ஒப்படைக்க மத்திய அரசு முன் வரவில்லை. மாறாக மத்திய அரசு தனது சார் கல்வியை திணிக்கவே முயற்சிக்கிறது. அதன்படி தான் மும்மொழிக் கொள்கை என ஆரம்பித்து தற்பொழுது சிபிஎஸ்இ பள்ளிகள் நிறுவுவதற்கு கூட மாநில அரசிடம் உரிமை கேட்க தேவையில்லை எனக் கூறியுள்ளனர்.