அரிசி சாப்பிடும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? அப்போ உங்க தலையில முடி இருக்காதே..!!

0
134
Eating Raw rice in tamil

Eating Raw rice in tamil: சிலர் ஸ்நாக்ஸ் சாப்பிடுவது போல வேகவைக்காத அரிசியை நினைக்கும் போது எல்லாம் சாப்பிட்டு கொண்டிருப்பார்கள். வீட்டில் அம்மா சொல்லியும் கேட்காமல் பலரும், சில நேரங்களில் அம்மாக்களும் இவ்வாறு செய்வது வழக்கம் தான். இட்லிக்கு மாவு அரைக்க அரிசி ஊறவைத்திருக்கும் போதும் அதில் இருந்து சிறிதளவு எடுத்து அரிசியை எடுத்து அப்படியே சாப்பிடுவார்கள். சிலர் போகும் போதும், வரும் போதும் அரசியை எடுத்து மென்றுகொண்டே செல்வார்கள். சாதம் வடிக்க அரிசி கழுவும் போது சாப்பிடுவார்கள்.

இவ்வாறு சாதாரணமாக அரிசி சாப்பிட போக, அது ஒரு பழக்கமாகவே மாறிவிடும். ஒருசிலர் அதற்கு அடிக்ட் ஆகிவிடுவார்கள். வெறும் அரிசியை சாப்பிடுவதால் தீமை என்று தெரிந்தும், தெரியாமலும் பலரும் இதனை சாப்பிடுகிறார்கள் அதனை பற்றி இந்த பதிவில் (Effects of eating raw rice in tamil) பார்க்கலாம்.

விளைவுகள்

அரிசியை சாப்பிடும் நபர்கள் அவர்களின் முடியை மறந்துவிட வேண்டியது தான். நீங்கள் தொடர்ந்து அரிசி சாப்பிட்டு வந்தால் உங்கள் தலையில் இருக்கும் முடி சிறிது நாட்களில் கொட்டிவிடும்.

மேலும் வேகவைக்காத அரிசியில் தான் செல்லுலோஸ் என்ற வேதிப்பொருள் இருக்கிறது. எனவே இந்த வேதிப்பொருள் வேக வைக்காமல் அப்படியே உண்பதால் நிச்சயம் செரிமாணம் பிரச்சனை ஏற்படுகிறது.

மேலும் பயிர்களுக்கு பலவிதமான பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிக்கிறோம். ஆனால் அது எல்லாம் அரிசியை வேகவைக்கும் போது அழிந்து விடுகிறது. ஆனால் பச்சையாக உண்பதால் அதில் படிந்துள்ள பூச்சிக்கொல்லி வயிற்றுக்குள் போய்விடுகிறது.

மேலும் அரிசியை உண்பதால் பூச்சிபல் ஏற்படுகிறது. பற்கள் சம்பந்தமான பிரச்சனைகளை உண்டு செய்கிறது.

மேலும் அரிசி உண்பவர்களுக்கு இரத்த சோகை ஏற்பட்டு, உடல் பருமனாக இருக்கும்.  ஆனால் இவர்களுக்கு பசி இருக்காது. மேலும் பெண்கள் தொடர்ந்து அரிசி சாப்பிட்டு வந்தார்கள் என்றால் அவர்கள் கர்ப்பப்பை சம்பந்தமான நோய்கள் உண்டாகும். மேலும் கருவுற்றிருந்தால் பிறக்கும் குழந்தைக்கும் ஆபத்தாக கூடும்.

முகம், கை, கால்கள் எல்லாம் வீங்கி போய் வெள்ளையாக காட்சியளிப்பார்கள். இதற்கு காரணம் ஹீமோகுளோபின் குறைவதால் இவ்வாறு ஏற்படும்.

அரிசி தொடர்ந்து உண்பதால் வாந்தி, தலைச்சுற்றல், உடல் சோர்வு போன்றவை ஏற்படும்.

மேலும் இதிலிருந்து விடுபட அரிசி சாப்பிட தோணும் போது எல்லாம், கடலை மிட்டாய், பொறி உருண்டை போன்றவற்றை சாப்பிடலாம்.

மேலும் படிக்க: என்னங்க பூஸ்ட் ஹார்லிக்ஸ்… வடித்த கஞ்சி குடிச்சிருக்கீங்களா? இதன் மருத்துவ பயன்கள் கேட்டால் ஆச்சரியப்படுவீங்க..!