உச்சத்தை தொடும் முட்டை விலை !! இனியும் அதிகரிக்கும் என வியாபாரிகள் அறிவிப்பு !!

0
167

நாமக்கல் மாவட்டத்தில் முட்டை விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து விற்கப்படுகிறது.

கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முட்டை கொள்முதல் விலை ரூபாய் 5.16 ஆக அதிகபட்சமாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், முட்டை உற்பத்தி குறைந்தாலும், வெளிமாநிலங்களில் தேவை அதிகரிப்பாலும், புரட்டாசி மாசம் என்பதினாலும் மூட்டை விலை அதிக அளவிற்கு தற்போது விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் புரட்டாசி மாதம் முடிய இன்னும் இரண்டு வாரங்களில் இருப்பதனால், முட்டை விலை மேலும் அதிகரிக்கும் என்று முட்டை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

சனிக்கிழமையான இன்று நாமக்கல் நிலவரப்படி ,ஒரு முட்டை விலை 20 காசுகள் உயர்ந்து ரூபாய் 5.75 ஆக நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் முட்டைக் கோழியின் விலை ரூபாய்.135 ஆகவும், கறிக்கோழி விலை ரூபாய்.94 நிர்ணயிக்கப்பட்ட விற்பனை செய்யப்படுகிறது.

Previous articleமீண்டும் விண்வெளி பயணத்தில் கல்பனா சாவ்லா விண்கலம் !!
Next articleதிடீரென உள்வாங்கிய கடல் நீர்!! சுனாமி ஏற்படுமா என அப்பகுதி மக்கள் அச்சம் !!