இது தேர்தல் மட்டுமல்ல மகாபாரதப் போர்!

Photo of author

By Sakthi

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் அனைத்து கட்சி தலைவர்களும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த விதத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் பாரதிய ஜனதா கட்சி இந்த முறை தமிழகத்தில் எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறது. ஆகவே அந்த கட்சி மிகத் தீவிரமாக பிரசாரத்தில் இறங்கி இருக்கிறது.

அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் பூண்டி வெங்கடேசன் ஆதரிக்கும் விதமாக, அந்த கட்சியின் மூத்த தலைவர் இல கணேசன் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அதன் பிறகு அவர் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்ததாவது தமிழகத்தில் நடைபெறவிருக்கும் தேர்தல் இரு கட்சிகளுக்கும், இரு சித்தாந்தங்களுக்கும் இடையில் நடைபெற உள்ள மோதல் என தெரிவித்திருக்கிறார்.


அதோட இன்னும் சொல்லப்போனால் இது ஒரு தர்மயுத்தம் என்று தெரிவித்திருக்கிறார் இல கணேசன். ஒருபுறம் பாண்டவர்களும் இன்னொருபுறம் கௌரவர்களும் இருப்பதைப் போல இருக்கிறது. பாண்டவர்கள் அணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அர்ஜுனன் போல தலைமை தாங்கி நிற்கின்றார். இது தர்மத்திற்காக போராடக்கூடிய போர் எதிரில் துரியோதனன் போல ஸ்டாலினும் அவரது ஆட்களும் இருக்கிறார்கள். என்று தெரிவித்திருக்கிறார்.

அதேபோல கருணாநிதியிடம் இருந்த எந்த பன்புமே ஸ்டாலினிடம் இல்லை என்று தெரிவித்திருக்கிறார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர் முதலமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து தான் எனக்கு தெரியும் ஆனால் அவர்தான் இந்த நான்கு வருடங்களில் செய்த திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளின் மூலமாக அந்த கட்சியை இதுவரையில் கொண்டு வந்திருக்கிறார்.

இந்த திறமை எதிர்காலத்தில் அதிமுகவை மேலும் வளர செய்யும் என்று தெரிவித்து இருக்கிறார்.. அதோடு எதிர்க் கட்சியில் இருக்கின்ற தலைவர்கள் தரம் தாழ்ந்து பிரச்சாரம் செய்கிறார்கள் இதன் காரணமாக என்னை போன்ற மரியாதை மிக்கவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு தயக்கத்தில் இருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.