முதியவர்களே உடனடியாக இந்த எண்ணை அழையுங்கள்! நேரடியாக வீட்டிற்கே வரும் புதிய திட்டம்!
கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருடங்களாக மக்களை பெருமளவில் பாதித்து வருகிறது. அதுமட்டுமின்றி வருடந்தோறும் இந்த தொற்றானது உருமாற்றம் அடைந்து வருகிறது. இதனை தடுக்க மக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி கொள்வது அவசியம் என்று அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது. தற்பொழுது உலகளவில் 75 சதவீதத்திற்கும் மேல் மக்கள் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். தடுப்பூசி செலுத்தாதவர்கள் இல்லம் தேடி சென்று செலுத்திக் கொள்ள விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.
இவ்வாறு இருக்கையில் சென்னை மாநகராட்சி தற்போது ஓர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்பொழுது சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இணைய நோயுடன் உள்ள 60 வயதிற்கும் மேல் உள்ள முதியோர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள பரிந்துரை செய்துள்ளது. இவர்கள் 1913,044-25 3845 20,044-46 122300 ஆகிய தொலைபேசி எண்களை 60 வயதிற்கு மேற்பட்டோர் தொடர்பு கொள்ளலாம். அவரை தொடர்பு கொண்டு தங்களின் இல்லம் இருக்கும் முகவரியை அளித்தால் போதும். நேரடியாகவே வந்து இணை நோயுடன் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு தவணை தடுப்பூசி செலுத்துவர்.
முதியோர்கள் சிரமப்படாமல் இருக்க சென்னை மாநகராட்சி ஆணையர் ஆலோசனை செய்து இவ்வாறான திட்டத்தை அமல் படுத்தி உள்ளார். கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாக்கும் ஒரு கவசம் தான் இந்த தடுப்பூசி. அவ்வாறு 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை இன்று முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.
இதில் சுகாதார பணியாளர்கள், முன் களப் பணியாளர்கள் மற்றும் இணைய நோயுடன் உள்ள முதியவர்கள் என அனைவருக்கும் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தப்படுகிறது.2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டு 9 மாதங்கள் அதாவது 37 வாரங்கள் கடந்தவர்களுக்கு இந்த முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நகர்ப்புற சமுதாய நிலையம் ஆகியவற்றில் இந்த பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.