இந்த ஆண்டு மீண்டும் தேர்தல்! வெளியான முக்கிய அறிவிப்பு!!

Photo of author

By Sakthi

இந்த ஆண்டு மீண்டும் தேர்தல்! வெளியான முக்கிய அறிவிப்பு!
கர்நாடகத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் அடுத்த தேர்தல் பணிகளுக்கு தயார் ஆகி வருவதாக தேர்தல் ஆணையம் சார்பில் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நாடளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த ஆண்டு மீண்டும் தேர்தல் நடைபெறவுள்ளது.
கடந்த 10ம் தேதி கர்நாடக மாநிலத்தின் சட்டசபை தேர்தல் நடிந்து முடிந்தது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த மே 13ம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சி 130க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை பிடித்துள்ளது. மத்தியில் ஆளும் பாஜக கட்சிக்கு கர்நாடக மாநில தேர்தலில் 60க்கும் மேற்பட்ட தொகுதிகள் மட்டும் தான் கிடைத்தது. கூட்டணி வைத்தாலும் ஆட்சியை பிடிக்க முடியாத பாஜக கட்சிக்கு கர்நாடக மாநிலத் தேர்தலில் தோல்வி அடைந்தது பெரும் சரிவாக பார்க்கப்படுகிறது.
இதையடுத்து கையோடு கையாக மீதம் உள்ள 5 மாநிலத் தேர்தல்களையும் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் அடுத்து தேர்தல் நடத்தப்படவுள்ளது. இந்த 5 மாநிலங்களின் தேர்தலை இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு இந்த 5 மாநிலங்களின் தேர்தல் ஒரு முன்னோட்டமாக இருக்கும்.