ஏமாறும் மக்கள் இருக்கும் வரையில் மட்டும்தான் ஏமாற்றும் அரசியல் வாதிகளுக்கு ஆயுள்!

0
140

தமிழ்நாட்டிற்கு சட்டசபை தேர்தல் விரைவில் வரவிருப்பதால் தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடித்திருக்கிறது. தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொகுதி பங்கீடு போன்றவற்றை முடித்துக்கொண்டு தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபடுவதற்கு முயற்சி செய்து வருகிறார்கள். அந்த வகையில் நேற்றிலிருந்து தமிழகத்திலேயே வேட்புமனுதாக்கல் தொடங்கியிருக்கிறது.

இந்த நிலையில், நேற்றைய தினம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் மாவட்டம் ஏற்காடு தொகுதியில் அதிமுகவின் வேட்பாளர் சித்ராவிற்கு ஆதரவாக தன்னுடைய முதல்கட்டப் பிரச்சாரத்தை தொடங்கினார். அந்த சமயத்தில் அவர் தெரிவித்ததாவது நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தல் மாற்றத்திற்கு உரியது இது அதர்மத்திற்கும் தர்மத்திற்கும் நடைபெறவிருக்கும் ஒரு யுத்தம் என்று தெரிவித்திருக்கிறார்.

திமுகவைப் பொறுத்தவரையில் அவர்களால் நிறைவேற்ற முடியாத பல வாக்குறுதிகளை கொடுத்து தான் கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் அவர்கள் வெற்றி அடைந்தார்கள் இப்போதும் அதே போன்ற வாக்குறுதிகளை தான் திமுக சார்பில் கொடுக்கப்பட்டு வருகிறது என்று திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நான் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன் அந்தவகையில் விவசாயிகளின் இன்ப துன்பங்கள் அனைத்தும் எவ்வாறு இருக்கும் என்பது எனக்கு தெரியும் என்று தெரிவித்த அவர் கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் அந்த சமயத்தில் தமிழக மக்களுக்கு வாக்குறுதி கொடுத்தது போலவே தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றி இருக்கிறோம் என்று தெரிவித்தார்.

அதேபோல தமிழகம் தேசிய அளவில் பல்வேறு துறைகளில் மத்திய அரசிடம் சாதனை புரிந்ததற்கான விருதுகளை வாங்கியிருக்கிறது. நாட்டிலேயே தமிழகம் தான் உயர் கல்வித் துறையில் சிறந்து விளங்குகிறது. அதோடு பேரிடர் காலங்களிலும் மழை காலங்களிலும் சிறப்பாக செயல்பட்டு பொது மக்களின் துயர் துடைப்பதில் தமிழக அரசு முழு மூச்சாக இருக்கின்றது என்று தெரிவித்திருக்கிறார்.தமிழக மக்கள் என்ன நினைக்கிறார்களோ அவர்களுடைய தேவை என்னவோ அதனை அறிந்து செயல்பட்டு அந்த வகையில் அவர்களுடைய தேவைகளுக்கும் அவர்கள் பாதிக்கப்படும் சமயத்தில் அவர்களுக்கு உறுதுணையாகவும் தமிழக அரசு இருந்து வருகிறது என்று தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.

அந்த வகையில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சில வாக்குறுதிகளை கொடுத்து தான் வெற்றி பெற்றது. ஆனால் வெற்றி பெற்றதோடு சரி தமிழக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் திமுக நிறைவேற்றியதாக தெரியவில்லை ஏனென்றால் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் அதற்கான சாத்தியக்கூறுகள் திமுகவிடம் இல்லை என்று சொல்லப்படுகிறது.

பல்வேறு வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டு இருந்தாலும் அந்த வாக்குறுதிகளை எல்லாம் மத்திய அரசின் ஆதரவில்லாமல் நிறைவேற்றுவது மிக மிகக் கடினம் என்று சொல்கிறார்கள். ஆனால் இதை எல்லாம் யோசிக்காமல் தேர்தல் லாபத்திற்காக வாக்குறுதிகளை அள்ளி வீசி தமிழக மக்களை ஏமாற்றி திமுக வெற்றி பெற்று விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதேபோல அந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமென்றால் தற்சமயம் நடைபெறவிருக்கும் சட்டசபைத் தேர்தலிலும் எங்களுக்கு வாக்களியுங்கள் என்ற கோரிக்கையை தமிழக மக்களிடம் முன்வைத்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருவதாக சொல்கிறார்கள்.

இதெல்லாம் நம்புவதை போலவா இருக்கிறது என்று ஒரு சிலர் கிண்டல் அடிக்கவும் செய்கிறார்கள். ஏனென்றால் தமிழகத்திலே ஆட்சியில் இல்லாத ஒருவர் மத்திய அரசுடன் எந்த ஒரு இணக்கமும் இல்லாத ஒரு கட்சி ஏகத்திற்கு தன் விருப்பப்படி வாக்குறுதிகளை அள்ளி வீசி வெற்றி பெற்றுவிட்டால் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை செயல்படுத்தி விட முடியுமா? என்றும் கேள்வி எழத் தொடங்கியிருக்கிறது.

தமிழகத்தை பொறுத்தவரையில் பாமர மக்களின் வாக்குகள் தான் அதிகம் படித்த பட்டதாரிகள் தற்சமயம் தான் முதல் தலைமுறையாக வாக்களிக்கும் உரிமையை பெற்று இருக்கிறார்கள். ஆகவே அந்த பாமர மக்களை குறிவைத்து தான் இதுபோன்று சாத்தியமற்ற வாக்குறுதிகளை கொடுத்து அவர்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று இதுவரையில் அரசியல் செய்து வந்தது திமுக என்ற கருத்தும் பொது மக்களிடையே நிலவி வருகிறது.மொத்தத்தில் ஏமாறும் மக்கள் இருக்கும் வரை ஏமாற்றும் அரசியல்வாதிகளும் இருந்து கொண்டுதான் இருப்பார்கள் என்று சொல்கிறார்கள். ஏமாறும் மக்கள் விவரம் ஆகிவிட்டால் ஏமாற்றும் அரசியல்வாதிகள் தன்னால் திருந்தி விடுவார்கள் இல்லை என்றால் ஒதுங்கி விடுவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.