உடைந்தது அதிமுக கூட்டணி! கூட்டணியில் இருந்து வெளியேறிய முக்கிய கட்சி!

Photo of author

By Sakthi

அதிமுக தன்னுடைய கூட்டணி கட்சியான தேமுதிக அந்த கட்சி கேட்ட தொகுதியை விட மிக குறைவான தொகுதியயே தேமுதிகவிற்கு தருவதற்கு திட்டமிட்டது. இதற்கு தேமுதிக தரப்பில் எதிர்ப்பு குரல் எழுந்தது. இந்த சூழ்நிலையில் சென்னையில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தின் இறுதியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்பாக எந்த ஒரு சுமுகமான முடிவும் எடுக்கப்படாத நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்து விலகிக் கொள்வதாக தேமுதிக அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

இதுதொடர்பாக தேமுதிகவின் பொதுச் செயலாளர் நடிகர் விஜயகாந்த் வெளியிட்டிருக்கின்ற அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது 2021ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் 3 கட்ட பேச்சுவார்த்தை நடந்தது .ஆனாலும் அந்த மூன்று கட்ட பேச்சு வார்த்தையிலும் இதுவரையில் எந்தவித சுமுகமான முடிவும் எட்டப்படவில்லை என்று தெரிவித்திருக்கின்றார்.

அதேபோல எங்கள் கட்சிக்கு நாங்கள் கேட்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டது. அதோடு நாங்கள் கேட்ட தொகுதிகளும் எங்களுக்கு வழங்குவதற்கு அதிமுக சம்மதிக்கவில்லை. இதன் காரணமாக மாவட்டச் செயலாளர்கள் உடன் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மனமொத்த கருத்துக்களின் அடிப்படையில் அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகிக் கொள்கிறது என்று அறிவித்திருக்கின்றார் நடிகர் விஜயகாந்த்.