தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு! மீண்டும் பரபரப்பானது அரசியல் கட்சிகள்!

Photo of author

By Sakthi

சென்னை வேளச்சேரி சட்டசபை தொகுதியில் 92ஆம் என் உடைய வாக்குச்சாவடி மையத்தில் மற்றும் மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை வாக்குப்பதிவு நாளன்று வாக்குப்பதிவு இயந்திரங்களை இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற அதைத்தொடர்ந்து தேர்தல் ஆணையம் இந்த மறுவாக்குப்பதிவு உத்தரவை பிறப்பித்து இருக்கிறது.

அந்த உத்தரவின்படி கடந்த 6 ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் எண் 26 வேளச்சேரி சட்டசபைத் தொகுதிக்கு உட்பட்ட டிஏவி பப்ளிக் பள்ளி சீதாராம் நகர் வேளச்சேரி சென்னை 42 என்ற முகவரியில் அமைந்திருக்கின்ற வாக்குச்சாவடி எண் 92 இருக்கு நடந்த வாக்குப் பதிவு செல்லத்தக்கது அல்ல என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதோடு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 58(1)(b)ன்கீழ் 26 வேளச்சேரி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட டிஏவி பப்ளிக் பள்ளி சீதாராம் நகர் வேளச்சேரி சென்னை 42 என்ற முகவரியில் அமைந்திருக்கின்ற வாக்குச்சாவடி எண் 92 இல் மறுவாக்குப்பதிவு வரும் 17ஆம் தேதி சனிக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி வாக்குச்சாவடியில் வரும் 17ஆம் தேதியன்று காலை 7 முதல் மாலை 7 மணி வரையில் மறுவாக்குப்பதிவு நடத்தப்பட இருக்கிறது.
இந்த சூழ்நிலையில், வேளச்சேரியில் மறு வாக்குப்பதிவு நடக்கும் பகுதியில் பரப்புரை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியிருக்கிறது.