தேசிய கட்சிகளுக்காக தனது முடிவில் இருந்து பின்வாங்கிய இந்திய தேர்தல் ஆணையம்
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, திரிணமுல் காங்கிரஸ் கட்சி, மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகிய கட்சிகள் தேசிய அங்கீகாரத்திற்கு பெற வேண்டிய ஓட்டுக்களை பெறாமல் மிக குறைவான ஓட்டுக்களை வாங்கியதால், அக்கட்சிகளின் தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்ற இந்திய தேர்தல் ஆணையம் வழங்கிய அங்கீகாரத்தை ரத்து செய்ய இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இதனை தொடர்ந்து அக்கட்சிகளுக்கு அறிவிக்கையை ஆணையம் சார்பாக அனுப்பப்பட்டது.
இந்த சூழ்நிலையில் வரவிருக்கும் பல்வேறு சட்டமன்ற தேர்தல்களில், தங்கள் ஓட்டு சதவீதத்தை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று அக்கட்சிகள் இந்திய தேர்தல் ஆணையத்திடம் சட்ட நிபுணர்களை வைத்து கோரிக்கை விடுத்தது, கோரிக்கையை பரிசீலனை செய்த பிறகு இந்திய தேர்தல் ஆணையம் இது குறித்த தனது முடிவை ஒத்தி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.