தேர்தல் ஆணையம் அதிகாரி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! சமூக வலைதளங்களுக்கு தடையா?
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள் மற்றும் 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் என மொத்த 649 உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தல் நடைபெற உள்ளது.இதை தொடர்ந்தநிலையில், நேற்று வேட்பாளர்கள் தங்கள் பிரசாரங்களை, வெடிவெடித்தும்,மேளம் தளாம் உடன் உள்ளாட்சி தேர்தலுக்கான நேரடி பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது.அதை, தொடர்ந்த நிலையில் சமூகவளைத்தள பிரசாரத்துக்கு அனுமதியில்லை என தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மேலும், வேட்பாளர்கள் இதனை மேற்கொண்டு வாட்ஸ் அப், பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவளைத்தளங்களில் நேற்று மாலை வாக்குகளை சேகரித்தனர்.இந்த நிலையில், தொடர்ந்து சமூகவலைத்தளமான பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற வலைத்தளங்கள் மூலம் விளம்பரங்கள் மற்றும் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதியில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்திள்ளது. மேலும், சமுக வலைத்தளங்கள் மூலம் பிரசாரம் மேற்கொண்டு வந்தால் சமந்தப்பட்ட வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என தேர்தல் ஆணைய ஆதிகாரி தெரிவித்தார். மேலும், வேட்பாளர்கள் பரபரப்பாக இருக்கும் சூல்நிலையில் வாக்காளர்களின் ஆதரவை திரட்டி கொண்டு தேர்தல் களத்தில் சந்திக்கும் நிலையில் உள்ளனர்.