தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு! தமிழகம் முழுவதும் 8 லட்சத்திற்கும் மேல் பெறப்பட்ட மனுக்கள்!

0
142

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் அடிப்படையில் அடுத்த வருடம்  ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியை தகுதி நாளாக கொண்டு 18 வயது நிறைவடைந்தவர்கள் மற்றும் 18 வயது நிறைவடைந்து இதுவரையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களுடைய பெயரை சேர்த்துக் கொள்ளும் விதத்தில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் நடைபெற்றுவருகின்றது.

அதனடிப்படையில் தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் பெயர் நீக்கம் மற்றும் திருத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக கடந்த 13 மற்றும் 14 அதோடு 20 மற்றும் 21 உள்ளிட்ட தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. இந்த முகங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், உள்ளிட்டவற்றை செய்வதற்காக தொகுதிக்கு உள்ளேயே முகவரி மாற்றம் செய்ய உள்ளிட்ட பணிகளுக்காக விண்ணப்பங்கள் வாங்கப்பட்டனர். நான்கு நாட்கள் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு 6 லட்சத்து 14 ஆயிரத்து 166 பேர் மனு கொடுத்திருக்கிறார்கள்.

சென்ற 11ஆம் தேதி நடைபெற்ற சிறப்பு முகாமில் மட்டும் 2 லட்சத்து 58 ஆயிரத்து 278 மனுக்கள் தரப்பட்டிருக்கின்றன வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்ய மற்றும் ஆட்சேபனை தெரிவிப்பது, குறித்து ஒரு லட்சத்து 518 பேர் மனுத்தாக்கல் செய்து இருக்கிறார்கள். பெயர் திருத்தம் செய்வதற்கு மற்றும் முகவரி திருத்தம் செய்வதற்கும் 78, 862 பேர் மனு தாக்கல் செய்திருக்கிறார்கள்.

ஒரே சட்டசபை தொகுதிக்கு முகவரி மாற்றம் செய்வதற்காக 66 ஆயிரத்து 33 பேர் மனுத் தாக்கல் செய்திருக்கிறார்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு மற்றும் நீக்கம் செய்தல் என்று ஒட்டுமொத்தமாக 4 நாட்கள் நடைபெற்ற சிறப்பு முகாம்களிலும், 8 லட்சத்து 59 ஆயிரத்து 580 பேர் மனுத் தாக்கல் செய்திருக்கிறார்கள். வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்காக எதிர்வரும் 27 மற்றும் 28 தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட இருக்கின்றன என தெரிவிக்கப்படுகிறது.

Previous articleமாணவர்களுடன் மாணவராய் அமர்ந்த அமைச்சர்! நெகிழ்ச்சியில் மழலைச் செல்வங்கள்!
Next articleகோவை மாநாட்டில் 52 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்து!