பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழகத்திற்கு வரும் மூன்று மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல்! வெல்லப்போவது யார்?

0
153

தமிழ் நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக சார்பாக கேபி முனுசாமி மற்றும் வைத்திலிங்கம் உள்ளிட்டோர் போட்டியிட்டு சட்ட சபை உறுப்பினர்களாக வெற்றி அடைந்தார்கள். இவர்கள் இருவரும் முன்னரே நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த முகம்மது ஜான் அவர்கள் சமீபத்தில் மறைந்தார்.

இந்தநிலையில், வைத்திலிங்கம் மற்றும் கேபி முனுசாமி உள்ளிட்டோர் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று சட்டசபை உறுப்பினர் ஆனதால் அவர்கள் இருவரும் சட்டசபை உறுப்பினர் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் என்ற இரு பதவிகளில் ஏதேனும் ஒரு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கட்டாயத்திற்கு ஆளானார்கள். அதேபோல அவர்கள் இருவரும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்கள்.

அதோடு அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த முகமது ஜான் மறைந்துவிட்டார். இதன் அடிப்படையில் தமிழகத்தில் தற்சமயம் மூன்று நாடாளுமன்ற தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டனர் இந்த சூழ்நிலையில், இந்த மூன்று காலி இடங்களுக்கான தேர்தல் ஒன்றாக நடத்துவதா? அல்லது தனித்தனியே நடத்துவதா? என்று குழப்பம் உண்டானது.

அதோடு நாடாளுமன்றத்தை பொருத்தவரையில் தமிழகத்தில் இருந்து திமுக நாடாளுமன்றத்தில் ஒரு மிகப்பெரிய எதிர்க்கட்சியாக அமர்ந்திருக்கிறது அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் வைத்திலிங்கம் மற்றும் கேபி முனுசாமி உள்ளிட்டோர் தங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். ஏற்கனவே நாடாளுமன்றத்தில் அதிமுகவிற்கு சரியான பிரதிநிதித்துவம் இல்லாத சூழ்நிலையில், மத்திய அரசின் ஆதரவோடு தனக்கான திட்டங்களை கேட்டு பெற்றுக் கொண்டிருந்தது அதிமுக.. அப்படி இருக்க இப்போது இந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் இல்லாமல் போனதால் அதிமுகவிற்கு நாடாளுமன்றத்தில் பெரிய அளவில் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.

இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் தற்போது ஆளும் கட்சியாக இருக்கும் திமுக நாடாளுமன்றத்தில் மிகப்பெரிய எதிர்க்கட்சியாக அமர்ந்திருக்கிறது. இந்த சூழ்நிலையில், இந்த மூன்று நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வரும் ஆனால் அது நிச்சயமாக அதிமுகவிற்கு சாதகமாக தான் இருக்கும் அதில் எந்தவிதமான மாற்று கருத்தும் இல்லை.

இந்த நிலையில், காலியாக இருக்கின்ற 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு எப்போது எப்படி தேர்தல் நடத்தலாம் என்று தேர்தல் ஆணையம் குழப்பத்தில் இருந்தது தற்சமயம் வரும் அக்டோபர் மாதம் நான்காம் தேதி இந்த தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது. அதன் அடிப்படையில் மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் வரும் 15ஆம் தேதி ஆரம்பித்து 22ஆம் தேதி வரையில் நடைபெறும் என்று கூறப்பட்டிருக்கிறது.

செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி வேட்பு மனுவைத் திரும்பப் பெற கடைசி நாள் என்றும் கூறப்பட்டிருக்கிறது. அக்டோபர் 4ஆம் தேதி நடைபெறும் வாக்குப்பதிவு காலை 9 மணிக்கு ஆரம்பித்து மாலை 4 மணி அளவில் நடைபெற இருக்கிறது. அன்றைய தினமே மாலை 5 மணி அளவில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது.

Previous articleதமிழக மக்களுக்கு மிகக் கடுமையான எச்சரிக்கை விடுத்த சென்னை வானிலை ஆய்வு மையம்! மக்களே உஷார்!
Next articleதமிழகம் முழுவதும் காவல் துறையினருக்கு சைலேந்திரபாபு போட்ட அதிரடி உத்தரவு! பரபரப்பில் தமிழக காவல்துறையினர்!