தமிழக சட்டசபை தேர்தல்! துணை ராணுவ படை வருகை!

Photo of author

By Sakthi

தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறும் தேதி மார்ச் மாதம் அறிவிக்கப்படலாம் என்ற காரணத்தால், இந்த மாத இறுதிக்குள் அரசு திட்டங்கள் எல்லாவற்றையும் செயல்படுத்த ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன் ஆரம்ப புள்ளியாக தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு வரும் 25-ஆம் தேதி துணை ராணுவ படை தமிழகம் வரை இருக்கின்றது.

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்காளம், அசாம் போன்ற ஐந்து மாநில சட்டசபைக்கு வருகின்ற ஏப்ரல் அல்லது மே மாதங்களில் தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்கான வேலைகளில் தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டுவருகிறது.

இதன்காரணமாக, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா எல்லா மாநிலங்களுக்கும் சென்று அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் அவர்களுடைய கருத்துக்களை கேட்டறிந்து வருகின்றார். அந்த விதத்தில் எல்லா மாநிலத்திலும் எந்தெந்த தேதிகளில் தேர்தல் நடத்தப்படலாம் என்ற அட்டவணையை தேர்தல் ஆணையர் தயாரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழகத்தில் ஏப்ரல் மாத கடைசி வாரத்தில் தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்துவதற்கு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி இருப்பதால் எந்த தேதியில் தேர்தல் நடத்தலாம் என்ற விவரத்தை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைநகர் டெல்லியில் வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆகவே இதற்கான பிரத்தியேக பத்திரிகையாளர் சந்திப்பிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்று தேர்தல் ஆணையத்தின் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் தேதி வரும் மார்ச் மாதம் அறிவிக்கப்படலாம் என்ற காரணத்தால், இந்த மாத இறுதிக்குள் அரசு திட்டங்கள் எல்லாவற்றையும் செயல்படுத்த தீவிரமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

அதோடு சட்டசபை தேர்தல் பாதுகாப்பிற்காக, மத்திய துணை ராணுவப் படையினர் தமிழ்நாட்டிற்கு வருகை தர இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 25-ஆம் தேதி சென்னையில் ஆஜராக மத்திய துணை ராணுவ படைகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

அதன் முதல் கட்டமாக, மத்திய ஆயுதப் படையில் 45 மத்திய பாதுகாப்பு படையினர் தேர்தல் பணிக்காக தமிழ்நாட்டிற்கு வர இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஏப்ரல் மாத இறுதியில் சட்டசபை தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.