அமெரிக்காவின் ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல்! முன்னாள் அதிபருக்கு கிடைத்த முதல் வெற்றி!

Photo of author

By Sakthi

அமெரிக்காவின் ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல்! முன்னாள் அதிபருக்கு கிடைத்த முதல் வெற்றி!

அமெரிக்கா நாட்டில் ஜனாதிபதி வேட்பாளருக்கான தேர்தலில் முன்னாள் அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப் அவர்கள் முன்னிலை பெற்று வெற்றி பெற்று குடியரசு கட்சி சார்பாக தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு தேர்வாகியுள்ளார்.

அமெரிக்கா நாட்டில் இந்த ஆண்டு இறுதியில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் தற்பொழுது அமெரிக்க ஜனாதிபதியாக இருக்கும் ஜோ பைடன் அவர்கள் மீண்டும் ஜனநாயக கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடவுள்ளார்.

அவரை எதிர்த்து போட்டியிடுவதற்கு குடியரசு கட்சி சார்பாக டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார். அதே வேளையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி, ரான் டி சான்டிஸ், கரோலினா மாநிலத்தின் ஆளுநர் நிக்கி ஹாலே அவர்களும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதாக அறிவித்தனர். இதனால் நான்கு பேருக்கு மத்தியில் கடும் போட்டி நிலவியது.

குடியரசு கட்சி சார்பாக ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடப் போகும் அந்த நபர் யார் என்ற சந்தேகம் நிலவி வந்தது. இதையடுத்து ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்ய தேர்தல் நடத்தி விடலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து விவேக் ராமசாமி, ரான் டி சான்டிஸ், ஆளுநர் நிக்கி ஹாலே, டொனால்ட் ட்ரம்ப் ஆகம நான்கு பேரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். தேர்தலுக்கான தேதி நெருங்கிய நிலையில் இந்தியாவை சேர்ந்த விவேக் ராமசாமி அவர்கள் டொனால்ட் ட்ரம்ப் அவர்களுக்கு எதிராக போட்டியிட மாட்டேன் என்று கூறி தேர்தலில் இருந்து விலகினார்.

அதே போல ரான் டி சான்டிஸ் அவர்கள் செய்த பிரச்சாரம் டொனால்ட் ட்ரம்ப் அவர்களுக்கு எதிராக எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இதனால் ரான் டி சான்டிஸ் அவர்களும் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்யும் தேர்தலில் இருந்து விலகிக் கொண்டார். இதையடுத்து கரோலினா மாநிலத்தின் ஆளுநர் நிக்கி ஹாலே அவர்களுக்கும் டொனால்ட் ட்ரம்ப் அவர்களுக்கும் இடையே ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்வதில் கடும் போட்டி நிலவியது.

இதை முடிவு செய்வதற்கான அதாவது குடியரசு கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்யும் ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல் நியூ ஹாம்சயர் மாநிலத்தில் நடைபெற்றது. இந்த தேர்தலில் முன்னிலை பெற்ற டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் வெற்றி பெற்றார்.

இது டொனால்ட் ட்ரம்ப் அவர்களுக்கு கிடைத்த முதல் வெற்றியாக கருதப்படுகின்றது. இருந்தாலும் டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் அதிபர் தேர்தலில் போட்டியிட இரண்டு மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. இந்த தடையை எதிர்த்து டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.