பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்ட தமிழகம்! தேர்தல் பாதுகாப்பு பணி தீவிரம்!

Photo of author

By Sakthi

தமிழகத்தில் நாளை தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில் தமிழகத்தில் இருக்கக்கூடிய 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் கொரோனா தொற்று இருப்பவர்கள் மாலை 6 மணி அளவில் இருந்து 7 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வந்து தங்களுடைய வாக்கை செலுத்துவதற்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது நாளை நடைபெறும் சட்டசபை தேர்தலில் வாக்களிப்பதற்காக சென்னையிலிருந்து பெரும்பாலானோர் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்ல இருக்கிறார்கள்.

அவர்கள் தேர்தல் முடிந்த பின்னர் மறுபடியும் சென்னை திரும்புவதற்கு தேவையான பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்து கழகம் தகவல் தெரிவித்து இருக்கிறது. இதற்கு இடையில் தேர்தல் பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் மற்றும் சிறப்பு பிரிவுகளின் கீழ் இருந்து சுமார் 1.58 லட்சம் நபர்கள் ஈடுபட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.

தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி தமிழ்நாட்டில் தமிழக தேர்தல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் சுமார் ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 763 நபர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். இதில் தமிழக காவல்துறை மற்றும் ஆயுதப்படை காவல்துறை உள்ளிட்டோர் 74 ஆயிரத்து 162 பேரும், அதேபோல 8010 பேரும் என்று கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

அதோடு ஊர்காவல்படை தீயணைப்புத்துறை என்று மொத்தமாக 34 ஆயிரத்து 130 நபர்கள் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள். தமிழக காவல்துறை மட்டுமில்லாமல் வெளி மாநிலத்தில் இருந்தும் சுமார் ஆயிரத்து 350 காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு இருக்கிறார்கள். ஊர்காவல் படையை சேர்ந்த12411பேரும் இந்த தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள்.