வேலை நிறுத்த போராட்டத்தில் மின் ஊழியர்கள்! பொது மக்கள் சாலை மறியல்!

வேலை நிறுத்த போராட்டத்தில் மின் ஊழியர்கள்! பொது மக்கள் சாலை மறியல்!

மின் வாரிய ஒழுங்கு முறை ஆணையம் தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி அளித்ததை அடுத்து இம்மாதம் 10 ஆம் தேதி மின் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது.வீடுகளுக்கான மின் கட்டணம் 12 சதவீதம் முதல் 52 சதவீதமாக உயர்த்தப்பட்டது. வீடுகளுக்கான 100 யூனட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்வாரியத்திற்கு நஷ்டம் ஏற்ப்பட்டுள்ளதால் மின் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.இதனால் தான் மின் நுகர்வு மற்றும் புதிய மின் இணைப்பு பெறுவதற்கான கட்டணங்களை உயர்த்த மின் வாரியம் முடிவு செய்துள்ளது.இந்நிலையில் புதுச்சேரி மின்துறை தனியார் மயமாக்க ஒபந்தம் செய்யப்பட்டுள்ளது.

அந்த ஒப்பந்தத்தை எதிர்த்து மின் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த போரட்டத்தினால் புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் பொதுமக்கள் கோபம் அடைந்து சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

மேலும் இந்த சாலை மறியலினால் அந்தந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.மேலும் சில முயற்ச்சிகளுக்கு பிறகு மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment