மின் கட்டணம் அதிரடி உயர்வு! அதிர்ச்சியில் நுகர்வோர்!

0
309
Electricity bill increase! Consumers in shock!
Electricity bill increase! Consumers in shock!

மின் கட்டணம் அதிரடி உயர்வு! அதிர்ச்சியில் நுகர்வோர்!

கடந்த செப்டம்பர் மாதம் தமிழ்நாடு மின்சார வாரியம் மின்சார கட்டணத்தை உயர்த்தியது.வீடுகள் ,அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வணிக கட்டிடங்கள் ,தொழிற்சாலைகள் போன்றவற்றிற்கு உயர்த்தப்பட்டது.மேலும் 500 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரத்தை பயன்படுத்தினால் ரூ இரண்டாயிரத்திற்கு மேல் கட்டணம் செலுத்த வேண்டும்.

இந்த மின் கட்டணம் திடீர் உயர்வால் வாடகை வீடுகளில் வசிப்பவர்கள் பெரும் சிரமம் அடைந்தனர்.ஒவ்வொருவரும் கூடுதல் மின் கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஏசி பயன்படுத்துபவர்கள் மின் கட்டணமாக ரூ 5 ஆயிரம் முதல் ரூ 10 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது.இவ்வாறு மின் கட்டணம் உயர்வு பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தற்போது பொது பயன்பாட்டிற்கான மின் கட்டணமும் அதிகபடுத்தப்பட்டுள்ளது.

கடந்த மாதத்தில் இருந்தே வீடுகள் ,அடுக்குமாடி குடியிருப்புகள் ,வணிக பயன்பாடு கடைகள் போன்றவை பொதுவாக பயன்படுத்தப்படும் படிக்கட்டு மின் விளக்குகள்,மோட்டார் ,லிப்ட் கட்டணம் போன்றவைகள் உயர்த்தப்பட்டுள்ளது.

இதுவரை 1 ஏ என்ற அடிப்படையில் 100 யூனிட்டுகள் இலவசமாக பொது பயன்பாட்டிற்கு இருந்து வந்தது.தற்போது 1 டி ஆக மாற்றப்பட்டுள்ளது.இதன் மூலம் வணிக பயன்பாட்டிற்குரிய கட்டணம் ஒரு யூனிட்டிற்கு 8 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Previous articleFIFA உலக கோப்பை கால்பந்து போட்டி! 8 நிமிடத்தில் வெற்றியை தட்டித்தூக்கிய நெதர்லாந்து அணி!  
Next articleபாமக தலைமையில் தான் கூட்டணி! 2026 சட்டமன்ற தேர்தல் குறித்து முக்கிய தகவலை வெளியிட்ட பாமக தலைவர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here