மின் கட்டணம் உயர்வு ! மின் வாரியம் விளக்கம்!

Photo of author

By Parthipan K

மின் கட்டணம் உயர்வு ! மின் வாரியம் விளக்கம்!

மின்கட்டணம் உயர்வு குறித்து தற்போது மின் வாரியம் மனுக்கள் சமர்ப்பித்துள்ளது . அந்த மனுக்களின் அடிபடையில் மின் பயன்பாடு மற்றும் புதிய மின் இணைப்பு வழங்கும் கட்டணங்களை உயர்த்த மின்சார ஒழுங்கு முறை ஆணையம் முடிவு செய்துள்ளது.அந்த மனுக்கள் குறித்து மக்களிடம் கருத்துகள் கேட்டு அதற்கான பதில்களை அளிப்பதுடன் அந்த விபரங்களை சேர்த்து சமர்பிக்குமாறும் மின் வாரியத்திற்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதன் அடிப்படையில் இணையத்தில் வெளியிட்ட மின் வாரியம் ஒரு மாதத்திற்கு மேல் கருத்து கேட்டு வந்தது. இதற்கான கால அவகாசம் இம்மாதம் 24 ஆம் தேதி முடிவடைந்தது.இந்நிலையில் தபால் ,இணையதளம் ,நேரடியாகவும் 4500 நபர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு மின் வாரியம் சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் மின் துறை வழிகாட்டுதலின்படி விநியோக முறையை வழிபடுத்தும் திட்ட நிதியை பெற மின்கட்டணத்தை திருத்தம் செய்ய வேண்டும் என்பது நிபந்தனை ,கட்டண திருத்தம் செய்யப்படா விட்டால் மின் வாரியத்திற்கு 10 ஆயிரத்து த்து 793 டி ரூபாய்க்கான மானியங்கள் வழங்கப்படாது எனவும் மின் கட்டணத்தை எட்டு ஆண்டு இடைவெளிக்கு பிறகு உயர்த்துவதை தவிர வேறு வழி இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது .