EB பில் கட்ட மறந்தவர்களுக்கு மின்வாரியமே தந்துள்ள செம்ம ஐடியா!! என்னவென்று தெரியுமா?
தமிழகத்தில் மின்சார சேவை பெறும் அனைவருக்கும் மின் கட்டணம் செலுத்துவது தொடர்பான குறுஞ்செய்தி அனுப்பப்படுவது வழக்கம்.ஆனால் சிலர் உரிய நேரத்தில் மின்கட்டணம் செலுத்த மறந்து விடுகின்றனர்.இதனால் வீட்டின் மின் இணைப்பை மின்சார வாரிய ஊழியர்கள் துண்டித்து விடுகின்றனர்.இதனால் மக்களுக்கும் மின்சார வாரியத்திற்கும் இடையே கருத்து மோதல் உண்டாகும் சூழல் ஏற்படுகிறது.
இது போன்ற சூழ்நிலைகளை தவிர்ப்பதற்காக தமிழ்நாடு மின்சார வாரியம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.அந்தவகையில் மின்சார கட்டணம் செலுத்துவதை எளிமையாக்கும் வகையில் வாட்ஸ்அப்பில் புதிய சேவையை அறிமுகம் செய்தது.
இந்நிலையில் கரண்ட் பில் கட்ட மறக்கும் பயனாளிகளுக்கு மின்சார கட்டணம் செலுத்துவதற்கு அவகாசம் வழங்கப்பட்ட கடைசி மூன்று நாட்களுக்கு முன்னதாக SMS வாயிலாக நினைவூட்டப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்திருக்கிறது.இதனால் மறக்காமல் மின்சார கட்டணம் செலுத்திவிட முடியும்.
வாட்ஸ்அப்பில் மின்சார கட்டணம் செல்லுவது எப்படி?
மின் இணைப்பு பெற்றிருப்பவர்கள் ‘94987 94987’ என்ற எண்ணை போனில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.பின்னர் உங்கள் வாட்ஸ்அப்பிற்குள் சென்று Tangedco லோகோ உள்ள எண்ணிற்குள் நுழையவும்.பின்னர் இந்த எண்ணிற்கு வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பினால் அதில் View Bill,Pay bill என்று வரும்.இதில் Pay bill என்பதை கிளிக் செய்து மின்சார கட்டணத்தை செலுத்தலாம்.