மின் கட்டணம் செலுத்தாமல் போக்குக் காட்டி வந்த பயனாளர்களின் மின் இணைப்பு துண்டிப்பு!! மின் வாரியம் அதிரடி உத்தரவு!!
தமிழகத்தில் மாதம் தோறும் பராமரிப்பு பணிகளுக்கு மின்தடை ஏற்படும். மற்ற நேரங்களில் தமிழக அரசு தடையில்லா மின்சார சேவையை வழங்கி வருகிறது. இதனையடுத்து தமிழகத்தில் லட்சக்கான மின் மீட்டர்கள் பழுதடைந்து உள்ளதாக தகவல் வந்திருந்தது. ஏற்கனவே இது குறித்து தமிழக மின் வாரியம் அனைத்து மாவட்ட மேற்பார்வை பொறியாளர்களுக்கு புதிய உத்தரவிட்டியிருந்தது.
அந்த உத்தரவில் பழுதடைந்த 2.06 லட்சம் மீட்டர்களை உடனடியாக சரி செய்து தருமாறு தெரிவித்திருந்து. மேலும் ஒருமுனை பிரிவில் 1.74 லட்சமும், மும்முனை பிரிவில் 32,000 மீட்டர்களில் குறைபாடு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் மின் கட்டணத்தை செலுத்தாமல் ஆயிரத்திற்கும் மேல் உள்ளவர்களின் மின் இணைப்பை துண்டிக்க மின் வாரியம் உத்திரவிட்டுள்ளது.
இதனையடுத்து இரண்டு வருடமாக 56,565 பேர் கால அவசத்தையும் தாண்டி மின் கட்டணம் செலுத்தாமல் இருப்பதாக தகவல் வந்தது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் 47.26 கோடி ரூபாய் மின் கட்டணம் செலுத்தாமல் உள்ளார்கள். மேலும் மின்வாரியத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
இதனையடுத்து அவரிகளின் மின் இணைப்பு கணக்கை நிரந்தரமாக முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் துண்டிப்பது மட்டுமல்லாமல் கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் அந்த உத்தரவில் தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் மீட்டர்களை விரைவில் மாற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளது.