District News

மதுரையில் எலெக்ட்ரானிக்ஸ் கடையில் தீ விபத்து! கொளுந்து விட்டு எரிவதால் பரபரப்பு…

Electronics shop Fire in Madurai

மதுரையில் எலெக்ட்ரானிக்ஸ் கடையில் தீ விபத்து! கொளுந்து விட்டு எரிவதால் பரபரப்பு…

மதுரையில் மீனாட்சியம்மன் கோவில் செல்லும் டவுன் ஹால் பிரதான சாலையில் உள்ள எலெக்ட்ரானிக்ஸ் கடை ஒன்றில் இரவு 10.45 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ மளமளவென பரவியதால் அடுத்தடுத்து இரண்டு கடைகளுக்கும் பரவி கொளுந்து விட்டு எரிந்து வருகிறது.

தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் கரும்புகை வெளியேறி அப்பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து அப்பகுதிக்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் போக்குவரத்தை காவல்துறையினர் தடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அருகில் உள்ள கடைகளில் மின் இணைப்பை மின்சாரத்துறையினர் துண்டித்துள்ளனர்.

விபத்துக்கான காரணங்கள் குறித்து இதுவரை தகவல் தெரியவில்லை. தீ விபத்தில் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து காலையில் தான் தெரிய வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Comment