மீண்டும் ஒரு யானை உயிரிழப்பு !என்ன நடந்தது?
கோவை மேட்டுப்பாளையத்தில் நெல்லிமலை காட்டில் வளர்ந்து வந்த யானை தாடையில் காயம்பட்டு இறந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேட்டுப்பாளையத்தில் வனக்காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொழுது நெல்லிமலை காட்டில் யானை நடக்க முடியாமல் படுத்து கிடந்ததை கண்டு உள்ளனர். சுற்றியும் பல யானைகள் இருந்ததால் அவர்களால் பக்கத்தில் செல்ல முடியாமல் கவனித்து மட்டும் இருந்துள்ளனர்.
சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த யானைகள் விலகிச் சென்றதும் அருகில் சென்று யானைக்கு என்னவாயிற்று என்று பார்த்துள்ளனர்.
பார்த்த பொழுதுதான் தெரிந்தது அது ஒரு ஆண் யானை என்றும் அதன் தாடையில் பயங்கரமான காயங்கள் ஏற்பட்டுள்ளது எனவும் அறிந்தனர்.
காவலர்கள் மருத்துவரை அணுகி நடந்ததை கூறி யானைக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளனர். இரண்டு நாட்கள் நீடித்த சிகிச்சை பலனின்றி யானை என்று உயிரிழந்துள்ளது.
காரணம் என்னவென்று மருத்துவரிடம் வினவியபோது அவர் கூறியது,
பொதுவாக காட்டில் எப்பொழுதும் யானைகளுக்கு பொதுவாக சண்டைகள் ஏற்படும். இப்படி மற்றொரு ஆண் யானையிடம் இந்த யானை சண்டையிட்டு இருக்கலாம் இதனால் இந்த யானைக்கு பலமாக காயங்கள் ஏற்பட்டு உள்ளது என மருத்துவர் தெரிவித்தார்.
பின் அதன் தாடையில் உள்ள காயத்தில் புழுக்கள் இருந்தன எனவே மிகுந்த வலியால் வேதனைப்பட்ட யானை 8 முதல் 10 நாட்களுக்கு உணவு உண்ண முடியாமல்தவித்திருக்கும் அதனால் நலம் குன்றி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
உயிரிழந்த யானைக்கு உடற்கூறு ஆய்வு செய்தபின் நெல்லிமலை காட்டிலேயே யானை புதைக்கப்பட்டது