கடன் பிரச்சனையை போக்கி பண வரவை பெருக செய்யும் பஞ்ச கவ்ய விளக்கு!

0
330

கடன் பிரச்சனையை போக்கி பண வரவை பெருக செய்யும் பஞ்ச கவ்ய விளக்கு!

குடும்பத்தில் கடன் தொல்லைகள் நீங்கி லட்சுமி கடைக்கண் பெருக வீட்டில் சிறிய ஹோமங்களை செய்ய வேண்டும். ஆனால் இதற்கான பணச்செலவு சற்று அதிகம் ஏற்படும்.பலருக்கும் இந்த பரிகாரம் பற்றி தெரிந்திருக்கும்.

பஞ்சகவ்ய விளக்கை வீட்டில் ஏற்றும் பொழுது அர்ப்பணித்தல் செய்யும் போது கிடைக்கும் அதே நன்மைகள் தான் இதிலும் கிடைக்கிறது. இந்தப் பஞ்சகவ்ய விளக்கானது பால், தயிர், நெய், கோமியம், சாணம் இவைகளால் மட்டும் செய்யப்பட்டது.

பஞ்சகவ்ய விளக்கை அரச இலை, செம்பருத்தி இலை, வாழையிலை அல்லது வெற்றிலை இதில் ஏதேனும் ஒரு இலையின் மேல் வைக்கவும். பின்பு நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும்.இந்த பஞ்சகவ்ய விளக்கில் தீபம் ஏற்றும்போது அதிலிருந்து வரும் புகையின் வாசம் ஹோமத்திலிருந்து வரும் வாசத்திற்கு நிகரானதாக இருக்கும்.

இந்த விளக்கில் திரி எரிந்த பின்பு விளக்கும் சேர்ந்து எரிய ஆரம்பிக்கும். விளக்கு எரிந்த பின்பு கிடைக்கும் சாம்பல் தெய்வீக விபூதிக்கு சமமானதாகும். இந்த திருநீறை பூசிக் கொள்வதால் நமக்கு நன்மைகள் ஏற்படும்.

பஞ்சகவ்ய விளக்கை கிருத்திகை, அமாவாசை, பௌர்ணமி போன்ற சிறப்பான நாட்களில் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் ஏற்றுவதால் லட்சுமி நாராயண பூஜை செய்ததற்கும், ஹோமம் நடத்துவதற்கும் சமமாக கருதப்படுகிறது. வீட்டில் கன்றுடன் கூடிய பசுவின் படம் அல்லது கோமாதா படத்தின் முன்பு இந்த விளக்கை ஏற்றி வழிபடலாம்.

வீட்டின் எதிர்மறை ஆற்றல்களை அடியோடு வெளியேற்றி வீட்டில் சண்டை, சச்சரவுகளை நீக்கும். வீட்டில் நேர்மறை ஆற்றல் நிரம்பி லட்சுமி கடாட்சம் நிறைய செய்யும். மேலும் கடன் பிரச்சனைகள் குறைந்து வீட்டில் செல்வம் நிறைந்திருக்கும்.

Previous articleKanavu Palangal in Tamil : இதெல்லாம் கனவில் வந்தால் இது தான் அர்த்தம்! முழு விவரங்கள் இதோ!
Next articleவிருச்சிக ராசிக்காரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here