இனி எக்ஸ் தளத்தில்  ஹஷ்டக் பயன்படுத்த தேவையில்லை!! எலான் மஸ்க் அறிவிப்பு!!

Photo of author

By Sakthi

Elon Musk: இனி எக்ஸ் தளத்தில் ஹஷ்டக் பயன்படுத்த வேண்டிய தேவை இல்லை என எலான் மஸ்க் அறிவித்து இருக்கிறார்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் டிவிட்டரை விலைக்கு வாங்கினர் எலான் மஸ்க். இவர் தான் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதன்மை இடத்தில் தற்போது இருந்து வருகிறார். “டெஸ்லா” நிறுவனத்தின் நிறுவனத் தலைவர் ஆவர். இது கார் நிறுவனம் ஆகும் தற்போது இந்தியாவில் “டெஸ்லா” நிறுவன கார்களை விற்பனை செய்ய முடிவு செய்து இருப்பதாக தகவல் தெரிவித்து இருந்தார்.

இவர் டிவிட்டரை இணையதளத்தை விலைக்கு வாங்கிய பிறகு அதற்கு (எக்ஸ்) “x” என்ற பெயரை வைத்தார். மேலும், அந்த தளத்தில் உயர்மட்ட அளவில் இருக்கும் ஊழியர்களை அதிரடியாக பணி நீக்கம் செய்து அந்த இணையதள நிறுவனத்தின் புதிய மாற்றங்களை கொண்டு வந்தார். மேலும், தற்போது அந்த தளத்தில் வீடியோ/ஆடியோ அழைப்புகள், AI சாட்போட் gork உள்ளிட்ட சிறப்பு அம்சங்களை அறிமுகம் செய்து இருக்கிறார்.

அந்த வகையில் எக்ஸ் தளத்தில் ஹேஸ்டேக் (#) இடுகைகள் தேவையில்லாத ஒன்றாக இருக்கிறது என அறிவித்து இருக்கிறார். மேலும், இந்த ஹேஷ்டேக் (#)  எக்ஸ் தளத்தில் பயன்படுத்தி நமக்கு தேவையானவை அறிந்து கொள்ள உதவுகிறது. மேலும், எக்ஸ் தள பயன் பயன்பாட்டாளர் தங்களது கருத்துக்களை டிரண்ட் ஆக்க விரும்புவதால் என குறியீட்டை பயன்படுத்தி வருகிறார்கள்.

இனி இந்த குறியீட்டை பயன்படுத்த தேவை இல்லை என்றும் உங்கள் கருத்தை அல்லது டிரண்ட் ஆக்க விரும்பும் சொல்லை ஹேஸ்டேக் இல்லாமல் பதிவிட்டால் போதுமானது என பயனர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்து இருக்கிறார். மேலும், இனி சிஸ்டத்துக்கு ஹேஸ்டேக்குகள் தேவையில்லை, அதுமட்டுமில்லாமல் அவை பார்க்க அசிங்கமாக இருக்கிறது என குறிப்பிட்டு இருந்தார்.

மேலும், எக்ஸ் தளத்தில் ட்ரெண்ட் ஆக இருக்கும் பதிவுகளை காண விரைவில் புதிய வழியை உருவாக்க உள்ளதாக தெரிவித்து இருந்தார். மேலும், “ஏ ஐ” சப்போர்ட் அறிமுகப்படுத்த உள்ளதாவும் தெரிவித்து இருக்கிறார்.