பிரேம்ஜி வாழ்க்கையில் மறைந்த சங்கட்டம்!! மனைவி இந்து கவலை..

Photo of author

By Gayathri

பிரேம்ஜி வாழ்க்கையில் மறைந்த சங்கட்டம்!! மனைவி இந்து கவலை..

Gayathri

Embarrassment in Premji's life!! Wife Hindu worried..

2024 ஆம் ஆண்டு தமிழ் சினிமா துறையில் மறக்க முடியாத ஆண்டாக உள்ளது. இந்த ஆண்டில் பல பிரபலங்களுக்கு திருமணம் ஆகியது. அவற்றுள் ஒரு திருமணம் தான் முரட்டு சிங்கிள் பிரேம்ஜி. இவர் சேலத்தை சார்ந்த மென் பொறியாளர் இந்து என்பவரை காதலித்து வந்தார். இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஜூன் மாதம் இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்தது.

பிரபல இயக்குனர் கங்கை அமரனின் மகனான பிரேம்ஜிக்கு திருமணம் என வலைத்தளங்களில் செய்தி பரவியது. இதைப் பற்றிய உறுதியான தகவல் எதுவும் அவர் வெளியிடவில்லை. அவர் அண்ணன் இயக்குனர் வெங்கட் பிரபு தான் முதலில் எக்ஸ் பக்கத்தில் திருமணத்தை உறுதி செய்தார். அதன் பின் தான் ரசிகர்கள் முரட்டு சிங்கிள் பிரேம்ஜிக்கு திருமணம் என்பதே ஒத்துக் கொண்டனர். இவரது திருமணத்திற்கு இவரது பெரியப்பாவான இசைஞானி இளையராஜாவும், யுவன் சங்கர் ராஜாவும் வராததை பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது ரசிகர்களுக்கு இடையே. ஆனால், அவர்கள் இருவரும் திருமணம் முடிந்த பிறகு இளையராஜாவின் வீட்டிற்கு சென்று ஆசிர்வாதம் வாங்கி வந்துள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இவர்களின் காதல் திருமணத்திற்கு பொண்ணு வீட்டு சைடில் முழு சம்மதம் கிடைக்கவில்லை என சொல்லப்படுகிறது. திருமணம் முடிந்த நிலையில் பிரேம்ஜி மனைவி இந்து இவ்வாறு தெரிவித்துள்ளார். எனது “திருமண புகைப்படத்தில், என் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி ஆகியோரை எடிட் செய்து தான் இணைத்தோம்”. என் தம்பி போட்டோ அதில் இருக்காது. ஏனெனில்,என் தம்பி இன்னமும் ‘எங்களை புரிந்து கொள்ளவில்லை’. கல்லூரி படிப்பு முடித்து உள்ளான் என்பதால் அவனுக்கு இதை புரிந்து கொள்ளும் அளவுக்கு மெச்சூரிட்டி இல்லை.

என் கணவரும் அவனிடம் பேச முயற்சி செய்தும் ஒத்து வரவில்லை. அவனாகவே ரியலைஸ் பண்ணி வருவான் என விட்டு விட்டோம் என்றார் இந்து. இதைக் கேட்ட ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர். எனினும், கூடிய விரைவில் உங்கள் குடும்பம் உங்களை புரிந்து கொள்ளும் என ஆறுதல் கூறி வருகின்றனர்.