ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு! இ.எம்.ஐ மற்றும் டெபாசிட் வட்டி உயரும்?
ரிசர்வ் வங்கியானது வங்கிகளுக்கு வழங்கும் ரெப்போ வட்டி விகிதத்தை ஐந்தாவது முறையாக உயர்த்தி உள்ளது.வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய காலகடன்களுக்கான வட்டி விகிதம் ரெப்போ ரேட் ஆகும். இதனை 0.35 சதவீதம் ரிசர்வ் வங்கி உயர்த்தி உள்ளது.
கடந்த திங்கள்கிழமை நடந்த ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கை கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்துவதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் அறிவித்தார்.கடந்த 2020-ல் 4 சதவீதமாக இருந்த வட்டிவிகிதம் கொரோனா கால கட்டத்தில் சரிந்த பொருளாதாரத்தினால் உயர்த்தப்படாமல் இருந்த வட்டி விகிதம் இந்த நிதியாண்டில் நான்கு முறை உயர்த்தப்பட்டுள்ளது..
இந்நிலையில் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக வட்டி விகிதத்தை ஐந்தாவது முறை உயர்த்துவதாக சக்தி காந்த் தாஸ் கூறியுள்ளார்.கடந்த மே,ஜூன், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தி இருந்தது.இந்த நிதி ஆண்டில் ஐந்தாவது முறையாக ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்து உள்ளது. 5.90 சதவீதத்தில் இருந்து 6.25 சதவீதமாக உயர்ந்துள்ளது
இதனால் ரிசர்வ் வங்கியிடம் அதிக வட்டியில் கடன் பெறும் நாட்டில் உள்ள மற்ற வங்கிகள் வீட்டுக்கடன்,கார்க்கடன்,மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தும்..இதன்மூலம் புதியதாக கடன் வாங்குபவர்களின் இ.எம்.ஐ மட்டும் அல்லாது ஏற்கனவே கடன் வாங்கி இ.எம்.ஐ செலுத்துபவர்களின் இ.எம்.ஐ-யும் மேலும் உயரும் அபாயம் உள்ளது. டெபாசிட்களுக்கான வட்டி விகிதமும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.