மத்திய அரசுக்கு கீழ் இயங்கி வரும் National Insurance Company Limited நிறுவனம் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இந்நிறுவனத்தில் காலியாக உள்ள Assistants பணிக்கு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்து தேர்வு அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
வேலை வகை: மத்திய அரசு வேலை
நிறுவனம்: National Insurance Company Limited
பணியிடம்: இந்தியா முழுவதும்
பணி: Assistants
காலிப்பணியிட எண்ணிக்கை: Assistants பணிக்கு 500 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி:
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 21 வயது மற்றும் அதிகபட்சம் 30 வயது என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
மாத ஊதிய விவரம்:
Assistant பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.39,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
Assistant பணிக்கு Preliminary Examination மற்றும் Main Examination அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணியமர்த்தபட இருக்கின்றனர்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி
இப்பணிக்கு தகுதி, விருப்பம் இருப்பவர்கள் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தியிட்டு உரிய ஆவணங்களை இணைத்து ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க இறுதி நாள்: இப்பணிக்கு விண்ணப்பிக்க நவம்பர் 11 இறுதி நாளாகும்.