SBI வங்கியில் வேலைவாய்ப்பு! மாதம் ரூ.60,000 வரை ஊதியம்!

0
81
Employment in SBI Bank! Pay up to Rs. 60,000 per month!
Employment in SBI Bank! Pay up to Rs. 60,000 per month!

SBI வங்கியில் வேலைவாய்ப்பு! மாதம் ரூ.60,000 வரை ஊதியம்!

ஸ்டேட் பேங்க் வங்கி ஆனது ஒரு புதிய வேலைவாய்ப்பை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள FLC Counsellor, FLC Director பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் 15.6.2022 நாளில் பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும். தற்போது பாரத் ஸ்டேட் வங்கி வெளியிட்ட அறிவிப்பின்படி எஃப் எல் சி கவுன்சிலர் பணிக்கு 207 பணியிடங்கள் மற்றும் எஃப் எல் சி டைரக்டர் 04 பணியிடங்களும் என மொத்தமாக 211 காலிப்பணியிடங்கள் நிரப்ப திட்டமிட்டுள்ளது.

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 60 வயது முதல் 63 வயது வரை இருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. FLC Counsellor இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பவோர் SBI/e-ABs/others PSBs/RRBs வங்கி நிறுவனங்களில் Scaler I அல்லது அதற்கு மேல் பதவிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

FLC Director இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் SBI/e-ABs/others PSBs/RRBs வங்கி நிறுவனங்களில் அல்லது அதற்கு மேல் பதிவுகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இப்பணிக்கு விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர் என தெரிவிக்கப்பட்டது. இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்ட பணியாளர்களுக்கு மாதம் குறைந்தது ரூ.35,000/- முதல் ரூ.60,000/- வரை ஊதியத்தொகை வழங்கப்படும். ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தின் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 30.06.2002ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

author avatar
CineDesk