வேலைவாய்ப்பை பதிவு செய்யவில்லையா? பதிவு செய்யாதவர்கள் புதுப்பிக்க அரசாணை வெளியீடு!

Photo of author

By Kowsalya

வேலைவாய்ப்பினை பதிவு செய்யாதவர்கள், 2017, 2018, 2019 ஆம் ஆண்டுகளில் புதுப்பிக்க தவறியவர்கள் புதுப்பிக்க சிறப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசால் அரசு ஆணை வழங்கப்பட்டுள்ளது.

 

2017, 2018, 2019 (1.1.2017 முதல் 31.12.2019 வரை) ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு மேற்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு புதுப்பித்தல் சிறப்பு சலுகையை வழங்க அரசு ஆணையிட்டுள்ளது.

 

நிபந்தனைகள் பின்வருமாறு:

 

1. சலுகை பெற விரும்பும் நபர்கள் அரசாணை வெளியிடப்பட்டு நாளிலிருந்து 3 மாதங்களுக்குள் ஆன்லைன் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம்.

2. இச்சலுகை ஒரு முறை மட்டுமே வழங்கப்படும்.

3. மூன்று மாதங்களுக்குப் பின் வரப்படும் கோரிக்கை நிராகரிக்கப்படும்.

4. 1.1.2017 இந்த ஆண்டுக்கு முன் புதுப்பிக்கத் தவறியவர்கள் புதுப்பித்தால் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

 

இந்த அரசாணையை பத்திரிகைகளில் வெளியிடப்படவேண்டும் மற்றும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தகவல் பலகைகளில் ஒட்ட வேண்டும் என்று அரசு அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கியுள்ளது.

 

இதனால் 2017,2018, 2019 புதுப்பிக்க தவறியவர்கள் 3 மாதங்களுக்குள் ஆன்லைனில் https://tnvelaivaaippu.gov.in/Empower/ இணையதள முகவரிக்கு சென்று புதுப்பித்துக் கொள்ளலாம்.