பத்தாம் வகுப்பு மாணவர்கள்; வேலைவாய்ப்பு பதிவு செய்ய கடைசி தேதி! முழு விவரம்!

0
175

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்கள் கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு இணையதளத்தில் இன்று முதல் பதிவு செய்யலாம் என வேலைவாய்ப்புத் துறை அறிவித்துள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் மாணவர்களுக்கு இன்று முதல் வழங்கப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்திருந்தது. இதையடுத்து, மாணவர்கள் அந்தந்த பள்ளிகளிலேயே தங்கள் கல்வித்தகுதியை வேலைவாய்ப்பு இணையதளத்தில் இன்று (அக். 23) முதல் பதிவு செய்து கொள்ளலாம் என்று வேலைவாய்ப்புத் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து வேலைவாய்ப்புத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், அந்தந்த பள்ளிகளிலேயே தங்கள் கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மாணவர்களின் ஆதார் எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் செல்பேசி எண்கள் ஆகியவற்றைக் கட்டாயமாகப் பதிவு செய்ய வேண்டும்.

மாணவர்களின் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, கடவுச்சீட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை ஆகியவற்றில் ஒன்றை முகவரிக்கான அடையாள அட்டையாகக் கருத வேண்டும். இன்று முதல் தொடங்கும் வேலைவாய்ப்புப் பதிவுப் பணிகள் நவ. 06 ஆம் தேதி வரை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleதமிழக மாணவர்களுக்கு விரைவில் வருகிறது மகிழ்ச்சியான செய்தி…! பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்…!
Next articleகொடை வள்ளல்களின் வாரிசுகளுக்கு மட்டுமே கொடுக்கும் குணம் இருக்கும்…! ஸ்டாலினின் திமிர் பேச்சுக்கு ராஜேந்திர பாலாஜி பொளேர் பதில்…!