தீராத மலச்சிக்கலா!! நிரந்தர தீர்வு!!
மலச்சிக்கல் மிகவும் தொல்லை தரும் நோயாகும். பொதுவாகவே மலச்சிக்கல் உள்ளவர்கள் எப்பொழுதும் இப்ப பிரச்சனையை பற்றியே சிந்தனை செய்வார்கள். தலைவலி, உடல் சோர்வு, பசியின்மை போன்ற பிரச்சனைகள் மலச்சிக்கலினால் தான் வருகிறது என்று எண்ணிக் கொண்டிருப்பார்கள். ஆனால் மலச்சிக்கனினால் இப் பிரச்சனைகள் வருவதில்லை.
மலச்சிக்கல் என்பது ஒரு சிலர் நாள்தோறும் மலம் கழிப்பார்கள். ஆனால் இறுகி கட்டியாகச் செல்லும். இவ்வாறு மலம் கழிப்பது மிகவும் கடினமாக இருக்கும். ஒரு சிலர் மலம் இறுகள் இன்றி சாதாரணமாக கழிப்பார்கள். ஆனால் இவர்கள் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே மலம் கழிப்பார்கள்.
மலச்சிக்கலை கவனிக்காமல் விட்டால் பல தொல்லைகள் உண்டாகும். அத்தொல்லை உடலுக்கு கெடுதல் விளைவிப்பதோடு உயிருக்கும் சில சமயங்களில் ஆபத்தாகும்.
மலச்சிக்கல் வராமல் தடுக்க வழிமுறைகள்:
ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் குடிப்பதன் மூலம் மலச்சிக்கலை தடுக்கலாம்.
தினசரி ஏதேனும் ஒரு வகை உடற்பயிற்சியை செய்வதன் மூலமாகவும் மலச்சிக்கலை தடுக்கலாம்.
மலச்சிக்கலை தடுப்பதற்கு நாம் நார்ச்சத்து மிகுந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுதல் நல்லது. நார்ச்சத்து உள்ள உணவுகள் கேழ்வரகு, கோதுமை, திணை, வரகு, கீரை, வாழைத்தண்டு, பாகற்காய், பேரிச்சம் பழம், அத்திப்பழம் இன்னும் பல வகையான உணவுப் பொருட்கள் உள்ளன. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது மலச்சிக்கல் வராமல் தடுக்கலாம்.
மலச்சிக்கலை சரி செய்வதில் வெந்தயம் மிகவும் உதவுகிறது. நீரில் ஊற வைத்த வெந்தயம் சிறிது நேரத்தில் கொழகொழப்புத் தன்மையை அடையும். அதை சாப்பிடும் பொழுது உடலுக்கு தேவையான நுண் ஊட்டச்சத்துக்களை கிடைக்க செய்து மலச்சிக்கலை நிவர்த்தி செய்யும்.