DMK : அமலாக்கத்துறையானது டாஸ்மாக் ரீதியான சோதனையை கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக மேற்கொண்டு வருகிறது. இதில் எம்பி ஜெகத்ரட்சகன் என தொடங்கி டாஸ்மாக் தலைமை அலுவலகம் வரை சோதனை செய்ததில் ஆயிரம் கோடி ரூபாய் வரை தமிழக அரசு மோசடி செய்ததாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது. ஆனால் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் இதனை முற்றிலும் தவிர்த்து வருகின்றனர். அமலாக்க துறையின் அறிக்கை ரீதியாக, திமுகவை எதிர்த்து பாஜக சேர்ந்த தலைவர்களான அண்ணாமலை தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் நேற்று சென்னை டாஸ்மாக் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.
இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்தனர். போராட்டம் குறித்து முன் அறிவிப்பு வெளியிடப்பட்டதால் பல பாஜக தலைவர்கள் போராட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்னதாகவே கைது செய்யப்பட்டனர். கோபமுற்ற அண்ணாமலை நாங்கள் கட்டாயம் இது ரீதியான அறிவிப்பு ஏதும் இல்லாமல் ஒரு நாள் போராட்டம் நடத்துவோம், அப்பொழுது உங்களால் எதுவும் செய்ய முடியாது என்று கூறியுள்ளார்.முன்னதாகவே பண மோசடி வழக்கில் சிறைவாசம் அனுபவித்த செந்தில் பாலாஜிக்கு மேற்கொண்டு அதிக நெருக்கடியை ED கொடுத்து வருகிறது.
இச் சமயம் மதுபான மோசடி வழக்கில் செந்தில் பாலாஜியை கைது செய்ய அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றனர். இது ரீதியான வழக்கு தொடுத்தால் எப்படி வெளியே வருவது என்பது குறித்து கட்சி தலைமை ஆலோசனை செய்து வருவதாகவும், மேற்கொண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கும் பட்சத்தில் இதன் மூலம் கட்சிக்கு களங்கம் ஏற்பட்டு விடும் என்றும் கூறுகிறார்களாம் . இதனால் கட்சிக்குள் அடுத்து என்ன நடக்கும் என்பது குறித்த பதட்டமான சூழல் நிலவுவதாகவும் தெரிவித்துள்ளனர்.