B.E, B.Tech பொறியியல் படிப்பிற்கான மாணவர் தரவரிசை பட்டியல் வருகின்ற 28- ஆம் தேதி வெளியாகும் என்று தமிழக அரசு உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள 458 பொறியியல் கல்லூரிகளில் சேர்ப்பதற்கான முதற்கட்ட கலந்தாய்வு அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. மேலும், இந்த கலந்தாய்விற்கான ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்தவர்கள், சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் மாணவர்கள் ஆகும். அவர்களில் ஒரு லட்சத்து 14 ஆயிரம் மாணவர்கள், தங்களது சான்றிதழ்களை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
மாணவர்களுக்கான இரண்டாம் எண் கடந்த ஆகஸ்ட் மாதம் 26-ஆம் தேதி வெளியிடப்பட்டிருந்த நிலையில் ,தரவரிசை பட்டியல் செப்டம்பர் 17-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்தது.
பின்னர் ,தரவரிசையில் பட்டியல் செப்டம்பர் 25-ஆம் தேதி (இன்று) வெளியாகும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் மீண்டும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 28-ஆம் தேதி பொறியியல் தரவரிசைப் பட்டியல் வெளியாகும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்த மாணவர்கள் தங்களது சான்றிதழ்களை இன்னும் பதிவேற்றம் செய்யாமல் இருப்பதனால், அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பளிப்பதாக தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் தேதியை மாற்றப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.