42 வயதில் முதல்  IPL போட்டியில் பங்கேற்கும் இங்கிலாந்து ஜாம்பவான்!! பென் ஸ்டோக்ஸ் விலகல் !!

Photo of author

By Vijay

IPL: இங்கிலாந்து வேகபந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல் முறையாக ஐ பி எல் போட்டியில் விளையாட உள்ளார்.

இந்தியாவின் பிரபலான கிரிக்கெட் தொடரான ஐ பி எல் போட்டியில் முதல் முறை பங்கேற்க உளார் இங்கிலாந்து அணியின் வேகபந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன். 42 வயது ஆன இவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் முதல் முறையாக ஐ பி எல் இல் பங்கேற்ப்பது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

2025 ஆண்டுக்கான ஐ பி எல் தொடர் மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான வீரர்களின் ஐ பி எல் மெகா ஏலம் இந்த மாத கடைசியில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்திற்கு முன் அனைத்து அணிகளும் தங்கள் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டது.

இந்த முறை முதல்முறையாக இங்கிலாந்து ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஐ பி எல் ஏலத்திற்கு தனது பெயரை பதிவு செய்துள்ளார். அவருக்கு அடிப்படை விலையாக ரூ.1.25 கோடி நிர்ணயித்துள்ளது. இவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் திடீரென ஐ பி எல் போட்டியில் பங்கேற்றது அனைவர் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இந்த முறை ஐ பி எல் ஏலத்தில் பேரிரை பதிவு செய்ய வில்லை. அதனால் இந்த முறை ஐ பி எல் ல் அவர் பங்கேற்க மாட்டார். அதுமட்டுமல்லாமல் ஐ பி எல் புதிய விதிகளின் படி ஐ பி எல் மினி ஏலத்தில் அவருக்கு கலந்து கொள்ள இரண்டு ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்படும்.