ஐபிஎல்: அடுத்தடுத்து விலகும் இங்கிலாந்து வீரர்கள்!

Photo of author

By Parthipan K

ஐபிஎல் 2021ன் இரண்டாம் பாதியிலிருந்து இங்கிலாந்தின் பேர்ஸ்டோ, மலான் மற்றும் வோக்ஸ் ஆகியோர் விலகியுள்ளனர்.

போ்ஸ்டோ சன்ரைசா்ஸ் ஹைதராபாதையும், மலான் பஞ்சாப் கிங்ஸை யும், வோக்ஸ் தில்லி
கேப்பிட்டல்ஸையும் சோ்ந்தவா்களாவா். தனிப்பட்ட காரணத்துக்காக விலகுவதாக அவா்கள்
தெரிவித்திருந்தாலும், டி20 உலகக்கோப்பை இங்கிலாந்து அணியில் தேர்வாகியுள்ளதால் அந்த தொடருக்கு தயாராகவே அவர்கள் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளதாக தெரிகிறது.

இதனிடையே, ஐபிஎல் போட்டியில் பங்கேற்க இருக்கும் இந்திய வீரா்கள் மான்செஸ்டரில் இருந்து துபாய் புறப்பட்டுச் சென்றனா். கடந்த இரு நாள்களில் 2-ஆவது முறையாக அவா்களிடம் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவா்களுக்கு தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதியானதை அடுத்து அவா்கள் புறப்பட்டனா். ஐபிஎல் அணி நிா்வாகங்களில் சில தங்களது வீரா்களுக்காக தனி விமானத்தையும், சில வா்த்தக விமான பயணத்தையும் ஏற்பாடு செய்திருந்தன.

ஏற்கெனவே டெஸ்ட் தொடருக்காக இங்கிலாந்தின் ‘பயோ-பபுளில்’ இருந்த அவா்கள் தற்போது
துபாய் சென்ற பிறகு 6 நாள் தனிமைப்படுத்தலுக்குப் பிறகு அங்கிருக்கும் ‘பயோ-பபுளில்’
இணைவாா்கள். மும்பை இந்தியன்ஸ் அணி தங்களது வீரா்களான ரோஹித் சா்மா, ஜஸ்பிரீத்
பும்ரா, சூா்யகுமாா் யாதவ் ஆகியோரையும், அவா்களது குடும்பத்தினரையும் தனி விமானத்தில்
துபாய் அழைத்து வந்துள்ளது.

அதேபோல், ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா் வீரா்கள் விராட் கோலி, முகமது சிராஜ் ஆகியோரும்
தனி விமானத்தில் மான்செஸ்டரில் இருந்து துபாய் புறப்பட்டனா். சென்னை சூப்பா் கிங்ஸ் வீரா்கள்
வா்த்தக விமானத்தில் பயணித்தனா்.