வரலாறு காணாத வெயில்… உருகி வழிந்த ரயில் சிக்னல்களால் போக்குவரத்து பாதிப்பு!

Photo of author

By Vinoth

வரலாறு காணாத வெயில்… உருகி வழிந்த ரயில் சிக்னல்களால் போக்குவரத்து பாதிப்பு!

இங்கிலாந்தில் இந்த ஆண்டு வரலாறு காணாத அளவுக்கு வெயில் அடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகின் குளிர்பிரதேச நாடுகளில் ஒன்று ஐரோப்பாவில் இருக்கும் இங்கிலாந்து ஆனால் அந்த நாட்டில் தற்போது மிக அதிக வெப்பநிலையில் இருப்பதால், அதன் சாலைகள் மற்றும் ரயில் தடங்கள் வளைந்து, விரிவடைந்து, மோசமாகப் பாதிப்படைந்துள்ளன. கடந்த செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் அதிக வெயிலால் இங்கிலாந்தின் போக்குவரத்து உள்கட்டமைப்பு பாதிக்கப்பட்டது,

இந்த இரு நாட்களில் வெப்பநிலை 40C க்கு மேல் பதிவானதால், புதன்கிழமை பிரிட்டன் முழுவதும் ரயில் சேவைகள் பெரும் இடையூறுகளை எதிர்கொண்டன. கூடுதலாக, தீவிர காலநிலை காரணமாக பல காட்டுத்தீகள் தூண்டப்பட்டன.

உலகெங்கிலும் உள்ள அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு காட்சி உருகிய ரயில் சிக்னலைக் காட்டியது. அதிக வெப்ப நிலைக் காரணமாக உருகிய ரயில் சிக்னல் கருவிகளின் புகைப்படங்களை தேசிய ரயில்வே ட்விட்டரில் பகிர, அது இணையத்தில் அதிக கவனத்தைப் பெற்றுள்ளது.

இது சம்மந்தமான தேசிய ரயில்வே துறையின் பதிவில் “இன்று கிழக்கு கடற்கரை பிரதான பாதையில் பயணம் செய்வதற்கு முன் உங்கள் பயணங்களைச் சரிபார்க்க நாங்கள் கேட்டுக்கொள்கிறோம், ஏனெனில் நாங்கள் கடுமையான இடையூறுகளை எதிர்கொள்கிறோன். பீட்டர்பரோ மற்றும் லண்டன் கிங்ஸ் கிராஸ் இடையேயான பாதையில் ஏற்பட்ட தீ விபத்துக்குப் பிறகு நாங்கள் பாதையை சரிசெய்கிறோம், ” என்று அறிவித்தது.