இங்கிலாந்து இந்தியா மோதும் இரண்டாவது டெஸ்ட் ! விசாகப்பட்டினத்தில் இன்று தொடக்கம்! 

0
555
#image_title
இங்கிலாந்து இந்தியா மோதும் இரண்டாவது டெஸ்ட் ! விசாகப்பட்டினத்தில் இன்று தொடக்கம்!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மீதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று(பிப்ரவரி2) விசாகப்பட்டினத்தில் தொடங்கவுள்ளது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. இதனால் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
தற்பொழுது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விராட் கோஹ்லி, கே.எல் ராகுல், ஜடேஜா போன்ற முக்கிய வீரர்கள் இல்லாதது இந்திய அணிக்கு பின்னடைவை தந்துள்ளது. இந்திய அணியில் அஸ்வின், அக்பர் பட்டேல் ஆகியோர் தங்களுடைய உத்திகளை மாற்ற வேண்டும். ரவீந்திர ஜடேஜா இடத்தில் குல்தீப் யாதவ் அவர்கள் அணியில் இடம்பெறலாம். மேலும் வாஷிங்கடன் சுந்தர் அவர்களும் ஆல்ரவுண்டர் பட்டியலில் இருக்கின்றார்.
இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ளும் வகையில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் தயாராக இருக்க வேண்டும். கில், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். கே.எல் ராகுல் இடத்தில் ரஜித் பட்டிதார் இணைவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்த வரிசையில் சர்ப்ராஸ் கான் அவர்களும் இருக்கின்றார்.
இங்கிலாந்து அணியை பொறுத்தவரை பென் ஸ்டோக்ஸ், போப் உள்ளிட்டோர் பேட்டிங்கிலும், டாம் ஹார்ட்லி பந்துவீச்சிலும் தங்களுடைய பலத்தை சிறப்பாக காட்டி வருகின்றனர்.
விசாகப்பட்டினம் மைதானத்தில் தற்பொழுது வரை இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளது. இந்த ஆடுகளம் முதல் இன்னிங்சில் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். இங்கிலாந்து மற்றும் இந்தியா மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று(பிப்ரவரி2) காலை 9.30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் உள்ள ஏசிஏ-விடிசிஏ மைதானத்தில் தொடங்கவுள்ளது. இந்த போட்டியை ஸ்போர்ட்ஸ் 18 சேனல் மூலமாக பார்க்கலாம்.
Previous article6வது முறை சென்னையில் ஏடிபி சேலஞ்சர்ஸ் டென்னிஸ் போட்டி! பிப்ரவரி 4ம் தேதி தொடக்கம்! 
Next articleதவறாக பேசிய ஆ.ராசா நாக்கை அறுத்து விடுவேன்! செல்லூர் ராஜூ ஆவேச பேட்டி!