வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து அணி

இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கடந்த 24 ஆம் தேதி மான்செஸ்டர் எமிரேட்ஸ் ஓல்டு டிராஃபோர்டில் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதல் இன்னிங்க்ஸ் தொடங்கிய இங்கிலாந்து அணி 369 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து முதல் இன்னிங்க்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஸ்டூவர்ட் பிராட்  பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 197 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
இரண்டாவது இன்னிங்க்சை தொடங்கிய இங்கிலாந்து அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் எடுத்த போது டிக்ளேர் செய்தது. இதன் மூலம் 399 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து  அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 129 ரன்களுக்கே சுருண்டது. இதன் மூலம் 269 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2 – 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

Leave a Comment